பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஆனாலும், மீண்டும் விளையாட வாய்ப்பு தவறாகாமல் நடந்து கொள் என்ற கட்டளை. கோகோ ஆட்டத்தில் தவறுவது இயற்கை. மீண்டும் தவறாதே என்று வாய்ப்பினைத் தந்து ஆடஉதவும் வாய்ப்பு கபாடியில்.

இப்படி, மனித மனங்களுக்கு ஏற்றவாறு, மனித குணங்களைப் போற்றுமாறு, வாய்ப்புக்களை வழங்கி, வரவேற்பினை அளிப்பது விளையாட்டுக்கள் தாம்.

விளையாட்டில் நல்ல பண்புகளுடன் வெற்றி பெறவேண்டும் என்பதே தலையாய கொள்கை. ஒரு சமுதாயத்திற்கு இதுதானே அடித்தளம். ஆதாரமான நிலைத்தூண்கள்.

இந்தப் பண்புகளை வளர்க்கத்தானே விளையாட்டுக்கன் முயல்கின்றன. மைதானங்கள் உதவுகின்றன. வாய்ப்புக்கள் வழிகாட்டுகின்றன. வெற்றிகளை நிலை நாட்டுகின்றன.

விளையாட்டுக்கள் இவ்வாறு அர்த்தம் உள்ளவைகளாக விளங்குகின்றன.ஏனென்றால் விளையாட்டுக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகும். மனிதர்களின் உடன்பிறப்பாகும்.