பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62


அதிகமான போராட்ட நினைவுகள், புதுப்புது யோசனைகள், மன உலைச்சல்களையும் உணர்வுகளையும் உண்டாக்கி விடுகின்றன. அவை இருதயத்தை வெகு வேகமாக இயக்கி விடுகின்றன. இதன் தொடர்ச்சியே இரத்த அழுத்த நோய். அதனை அடுத்து வருவது மாரடைப்பாகும்.


புகழ்பெற்ற மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் தோன்றும் நோய்களுக்கு 50 விழுக்காடு காரணம் மன உலைச்சகள் தான், [Stress and Strain]. அவை நரம்பு மண்டலங்களை நிலை கொள்ளாமல் செய்து, விறைப்பினை ஏற்படுத்தி, இறுதியில் நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கி விடுகின்றன.


ஒரே வயது, ஒரே இனம், ஒரே மாதிரியான சூழ்நிலையில் வாழும் பலரை ஆராய்ச்சி செய்த பின், மேற்கொண்ட முடிவானது, மன உலைச்சல் உள்ளவர்களே விரைவில் வயோதிகர்களாகின்றார்கள்.

வசதிகள் இருந்தும், வளமாக வாழும் வாய்ப்பும் சூழ்நிலை இருந்தும், மனதினை அடக்கத் தெரியாத மக்கள் வாழ்வு. இன்றுத் தேரோட்டமாக அமையவில்லை. துன்பப்போராட்டமாகத் தான் அமைந்து கிடக்கிறது.

வாழ்க்கையில் எதிர்பார்ப்பு' என்று இருக்கிறதே, அது அதன் அனைத்துத் துன்பங்களுக்கும் ஆதிகரித்தாவாக அமைந்திருக்கிறது. எதிர்பார்ப்புத் தொடங்கிய உடனேயே, எல்லா உறுப்புக்களும் உசுப்பி விடப்படுகின்றன.

உணவை எதிர்பார்க்கும் பொழுது, ஜீரண உறுப்புக்கள் உமிழ் நீருடன், ஜீரண சுரப்பிகளின் ஊற்றுக்களால், காத்துக் கிடக்கின்றன. எதிர்பார்ப்பு ஏமாற்றமடையும்போது, ஜீரண உறுப்புக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றன. அங்கே மனமும் பாதிக்கப்படுகிறது. ஆமாம். அல்சரின் ஆரம்பம் அங்கே தானே!