பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அர்த்த பஞ்சகம் அமையாதபடி இருக்கின்றவனே! என்னிடத்தில் எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் வர வேண்டும். (7) மேம்பட்டவர்களாய் வேதங்களையறிந்து குற்ற மற்றவர்களாபுள்ள .ெ ப. ரி யோர் க ள் நுகர்கின்ற, என்னுடைய, வெல்லப்பாகு தோய்ந்த கனியே! நீ எக் காலத்திலும் எனக்குத் தந்தையாய் என் மனத்தில் நிலை பெற்றிருப்பாயேயானால், யான் உன்னிடத்தில் எக் காலத்திலும்,வேறு ஒரு பொருளையும் விரும்ப மாட்டேன். (8) என்னையறியாமல் கேட்டினை விளைத்துக் கொண்ட வன் யானே, "நீயும் உன் உடைமையும் என்றிருத்தலின் றி, 'நானும் என்னுடைமையும் என்று வகுத்துக் கொண்டு இருந்தேன்; யானும் நீயே யாவாய், என்னுடைமையும் நீயேயாவாய், நித்திய சூரிகள் துதிக்கின்ற, எனது நித்திய சூரிகளின் தலைவனே! (9) இடபங்கள் ஏழனையும் வென்று, அழகு கொண்ட இலங்கையை நீறாகும்படி செய்த மிக்க ஒளியையுடைய பரஞ்சோதி என்னை நம்பாதே, விரைவில் உனது அழகிய திருவடிகளில் சேர்ப்பாய்; உன்னைவிட்டுத் தனியே போகும் படி எப்பொழுதும் விடாதே. (10) (2) திருவேங்கடமுடையானுக்கு அ டி ைம செய்ய வேண்டும் எனல்: இஃது ஒழிவில் காலம் எல்லாம் (3-3) என்ற திருப்பதிகத்தால் தெளிவாகின்றது, மிக்க ஒளியோடு கூடிய அருவிகளையுடைய திரு வேங்கடத்து எழு ந் த ரு ளி யி ரு க் கி ன் ற அழகினைக் 1. "வானார் சோதி (பரமபத நாதன்) பகல் விளக்குப் பட்டிருக்கும்; நீலாழிச்சோதி (பாற்கடல் நாதன்) கடல் கொண்டு கிடக்கும்; வேங்கடத்து எழில்கொள் சோதி குன்றத் திட்ட் விளக்காயிருக் கும்’-ஈடு.