பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மா அடையும் பயன்கள் 77 படத்தையுடைய அனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடத் தின்மீது மொய்த்த சோலைகளையும் நெருங்கிய பூக்கள் பொருந்திய தடாகங்களையுமுடைய திருத்தாள் வரையை, உங்கட்கு ஏற்படுத்திய ஆயுளின் முடிவு எல்லையைச் சென்று குறுகி எய்த்து இளைப்பதற்கு முன்னர் அமைமின். (10) (3) பாகவதர்களுக்குத் தாம் அடிமையாக இருக்கும் உண்மையை ஆழ்வார் பேசுதல்: இது 'நெடுமாற்கு அடிமை' (8.10) என்ற திருப்பதிகத்தில் விளக்கப் பெறுகின்றது’ நெடுமாலுக்கு அடிமை செய்கின்றவனைப் போன்று அவனை நான் நினைத்த அளவிலே, தடுமாற்றம் நீங்கின கொடிய நல்வினை தீவினைகள் முழுவதும் நான் அறியா மலே நீங்கின; இனிப் பெறும் பேற்றினை நினைத்தால், கொடிய பெரிய தீவினையேனான யான், அவனுடைய அடி யார்களின் திருவடிகளைக் சேர்தலே அல்லாமல், பரந்த மூன்று உலகங்களைப் பெற்றாலும் அவனுடைய அடியார் களின் திருவடிகளைச் சேர்தலாகின்ற இதனை விடுதல் என்பது ஒன்று உண்டோ? இதனை யான் சொல்லவும் வேண்டுமோ? (I) பரந்த மூன்று உலகங்களின் செல்வத்தைப் பெற்றா லும் இந்த சம்சார சம்பந்தம் நீங்கிக் கைவல்ய சுகத்தைப் பெற்றாலும் கார்காலத்து மேகம் போன்ற திருமேனியை யுடைய எம்பெருமானது மலர்களால் அலங்கரிக்கப் பெற்ற 2. பயிலும் சுடர்ஒளி (3.7) என்னும் திருவாய் மொழியைக் காட்டிலும் இத்திருவாய்மொழிக்கு வாசி (வேற்றுமை)என்? என்னில்: 'பாகவதர்கள் இறையவர் கள்' என்றது அங்கு; பாகவதர்கள் இனியவர்கள்' என்கிறது இங்கு.