பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7S அர்த்த பஞ்சகம் வீரக்கழல்களை அணிந்த திருவடிகளிலே அடிமை செய் தலையே பயனாகக் கொண்டு அந்த அடிமையின் மேல் எல்லையிலே தலை நின்ற பாகவதர்களுடைய அழகிய திரு வடிகளை வணங்கி இப்பிறப்பிலேயே யான் பெற்ற பயனாகிய இன்பத்திற்கு ஒக்குமோ தீவினையேனாகிய எனக்கு? (2) வடிவிலே சிறுத்தவர்களாய் அறிவிலே பெருத்தவர் களாய் மனித வடிவாய் என்னை அடிமை கொண்டவர் களான அவன் அடியார்கள் இந்த உலகிலே சஞ்சரிந்துக் கொண்டிருக்க, (அவர்களுடைய மலரடிக்கீழ்புகுதல்). அன்றி இந்த உலகங்கள் மூன்றும் ஒருசேர நிறையும் படி யாகச் சிறிய பெரிய திருமேனியை வளரச் செய்த என் செந் தாமரைக்கண் திருகுறளனுடைய, பெருமை பொருந்திய சிறந்த வாசனையையுடைய அன்றலர்ந்த மலர் போன்ற திருவடிகளிலே புகுதலும் பா வி யேட்னா கி ய எனக்குப் பொருந்துமோ? (3) முற்காலத்தில் மிகப் பெரிய இந்த உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்த, சிவந்த அழகினை உடையதான பவளம் போன்ற திருவாயினையும், செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையும் உடைய என் அம்மான் பொங்கி எழுகின்ற தன் கல்யாண குணங்கள் என்வாயிலே ஆகவும், இந்திரியங்களைக் கொள்ளை கொள்ளுகின்ற, திருமேனி என் மனத்திலேயாகவும், அந்தத் திருமேனிக்குப் பொருந்திய மலர்கள் என்கையிலே ஆகவும்,யூரீவைணவர் கள் செய்யும் கைங்கரிய நெறியிலே நானும் சென்று நடக் கும்படி திருவருள் செய்தால் பரமபதம் செல்ல விரும்பாமல் இந்த உலகத்திலே சஞ்சரிக்கின்ற எனக்கு வந்த குற்றம் யாது? (4) பாகவதர்களுடைய வழியிலேயே பட்டு நித்திய கைங் கரியத்தைச் செய்யும்படி அவன் திருவருளைப் பெற்று, எம் பெருமானின் அழகிய மல்ர் போன்ற திருவடிகளின் கீழே