பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மா அடையும் பயன்கள் 79° சுழித்துச் கொண்டு ஒடுகின்ற சுடர்ச்சோதி வெள்ளம் என்னும்படியான பரமபதத்திலே ஆனந்தத்தையே வாழ்ச்சியாக அடைந்திருந்தாலும், இழிக்கப்பட்டுச் செல்லுகின்ற இந்தச் சரீரத்தோடே பிறந்து தன்னுடைய கல்யாண குணங்களை யான் கற்று, அவ்வநுபவத்தால் உண்டான பிரீதிசுொற்களின் உருவமாக வெளிவருகின்ற கவிகளாகிய அமுதத்தை அடியார்களோடு சேர்ந்து அது பவிக்கின்ற அநுபவத்திற்கு, மேலே கூறிய ஐசுவரிய கைவல்யங்கள் முழுதும் கூடினாலும் ஒக்குமோ? (5) தனக்கு ஒப்பு இல்லாத, புள்ளிகள் பொருந்தியசிவந்த முகத்தையுடைய குவலயா பீடம் என்னும் யானையைக் கொன்ற, அழகிய மோதிரத்தைத் தரித்த என் அம்மானும், தம் சாதிக்கு ஏற்றதான சிவந்த தலைமயிரையும் நெருப்புப் போன்ற கண்களையும் உயர்ந்த சரீரங்களையுமுடைய அசுரர்களின் உயிர்களை யெல்லாம் கொன்று உண்டு சஞ்சரிக்கின்ற கருடப் பறவையை வாகனமாகக் கொண் டுள்ளவனுமான எம்பெருமானது பெரிய ஒப்பற்ற சிறந்த கல்யாண குணங்களை அநுபவிக்கும் அநுபவத்திற்கு மூன்று உலகங்களையும் அழித்தும் படைத்தும் செல்லு தலாகின்ற ஐசுவரிய இன்பம் ஒத்தது ஆகுமோ? (6) ஒப்பற்ற பெரிய புகழே எக்காலத்தும் நிற்கும்படி யாகத் தான் படைப்புக் கடவுளாகத் தோன்றி, படைப்ப தற்காக நினைக்கின்ற பரப்பிரம்மாகிற பரம காரணமாய் எல்லா உலகங்களையும் உண்டாக்கின, ஒப்பற்ற பெரிய பரம்பொருளினுடைய தளிர் போன்ற மெல்லிய திருவடி களின் கீழே புகுந்து அடிமை செய்தல் அன்று யாம் விரும்பு வது; அவன் அடியார்களின் சேர்க்கையாலாகிய இன்பமே யாம் விரும்புவது; அதுவே எப்பொழுதும் எங்கட்கு வாய்க்க வேண்டும், (7) குளிர்ந்த தண்ணீரையுடைய கடலைப் படைத்து, ஒப்பு இல்லாத தன்னுடைய பல திருவடிகளையும் தோள்