பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அர்த்த பஞ்சகம் களையும் திருமுடிகளையும் பரப்பிக்கொண்டு, நீண்டு படர்ந்த பூக்களையும் கற்பகச் சோலையையும் நிறைந்த பல சூரியர்களின் ஒளியையுமுடைய மாணிக்கமலை போன்று திருக்கண் வளர்கின்றவனுடைய அடியார்களின் சேர்க்கை நங்கட் கு எப்பொழுதும் வாய்க்க வேண்டும். (8) அடியார்களுடைய கூட்டத்திற்கு வருகின்ற கொடிய வினைகளை எ ல் லா ம் அழிக்கின்ற சதுமூர்த்தியும், போரைச் செய்கின்ற திருவாழி திருச்சங்கு வாள் வில் தண்டு முதலிய பலவகைப்பட்ட ஆயுதங்களைத் தரித்த வனும். குமரனும், அழகிய ஐந்து பாணங்களையுடைய மன்மதனுக்குத் தந்தை யு மான எம்பெருமானுக்கு அடிமைப்பட்ட குற்றம் இல்லாத அடியார்கட்கு அடியார் கள் அவர்கட்கு அடியவர்கள், அல்வடியார்கட்கு அடியார் கள் ஆகின்ற பேறேதமியேற்கு வாய்க்க வேண்டும். (9) பெருமை பொருந்திய காயாம்பூவைப் போன்ற திரு மேனியையும் நான்கு திருத்தோள்களையும் அழகிய திரு வாழியையும் தரித்த திருக்கையையுமுடைய என் அம்மா னுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற அடியார்களுக்கு அடியார், அவர் களுக்கு அடியார் அவர்கட்கு அடியார், அவர்கள், எங்க ளுக்குத் தலைவர் ஆவர்; அந்த அடியார்கட்கே அடியவர் களாகச் செல்லுகின்ற நல்ல கொள்கையானது காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் தமியேற்கு வாய்க்க வேண்டும். (10) (4) ஆகிரை மேய்க்கச் சென்றால், பிரிவாற்றி. யிரோம் என்று போக்கைத் தவிர்க்கும்ாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல் இது வேய்மரு (10.3) என்ற திருப்பதிகத்தால் விளக்கப் பெறுகின்றது. மூங்கில் போன்ற இரண்டு தோள்களும் மெலியா நின்றன; என்னுடைய வருத்தத்தையும் தனிமையும்