பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மா அடையும் பயன்கள் 8 1 நோக்காத விரும்பத்தக்க குயில்களும் கூவா நின்றன கூட்டமான மயில்களும் கலந்து ஆடா நின்றன: பொருந்திய இனம் ஒத்த பசுக் கூட்டங்களை மேய்ப்ப தற்கி நீ செல்லுகின்ற ஒரு பகற்காலமும் ஆயிரம் ஊழிக் காலமாக உள்ளது; தாமரை மலர்களைப் போன்ற கண் களைக் கொண்டு ஈரா நின்றாய்: கண்ணா! நீ, அருளு டையவன் அல்லை, அருளுடையவன் அல்லை. எம்பெருமானின் பிரிவுக்கு ஆற்றாத ஆழ்வார் தமது பிரிவுத்துன்பதை வேற்றுவாயாலே பேசுகின்றார்; அஃதா வது, மங்கையரின் வாக்காகப் பேசுகின்றார் (1) கிருட்டினனே, நீ அருளுடையவன் அல்லை, அருளு டையவன் அல்லை; பெரிய முலைகளை நீ புணரும்தோறும் புணர்ச்சியில் அடங்காத இன்ப வெள்ளம் ஆகாயத்தையும் கடந்து அறிவும் அமிழ்ந்தும்படியாகப் பரந்து, அது கனவினைப் போன்று நீங்க, அந்த நிலையிலே மனத்தின் இடந்தோறும் உள்ளே புகுந்து, உயிரால் பொறுக்கமுடியாதபடி ஆசை பெருகுகின்றது; அந்தோ! மேலும் மேலும் உன்னைப் பிரிதற்குக் காரணமாக இருக்கின்ற பசுமேய்க்சப் போதலாகிற இது தவிர்வதாக. (2) நீ நின் பசுக் கூட்டங்களை மேய்ப்பதற்குப் போகின்ற போக்கினால் நான் அழிவேன்; வெவ்விதாக மூச்சுவிட்டு என் உயிர் வேகா நின்றது; ஒருவரும் துணை இல்லை; யான் இறவாமல் இருந்து உன் அஞ்சனம் போன்ற திரு மேனியின் நடையாட்டத்தைக் காண்கின்றேன் இல்லை; நீ பிரிந்து போனால் இந்த ஒரு பகலும் கழிவது அன்று: தனக்குக்தானே ஒத்த கயல்மீன் போன்ற இரண்டு கண் களிலும் கண்ணிர் மேலும் மேலும் பெருகா நிற்கின்றது; இந்த ஆயர் குலத்திலே ஆயர் பெண்களாகப் பிறந்த அ.-6