பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மா அடையும் பயன்கள் 83 நின் மனத்திற்கு இசைந்த பெண்களும் பலர் உள்ளனர்: அது நிற்க, உன் பிரிவில் எம்முடைய பெண்மையை ஆற்றி அடக்கி இருக்க முடியாத நிலையில் உள்ளோம்; எங் களுக்கு, கூரிய விசாலமான இரண்டு கண்களிலும் இருந்து வருகின்ற கண்ணிரும் நிற்கின்றதில்லை; மனமும் நிற்கின்ற தில்லை; ஆதலால், கணப்பொழுதும் பிரிவு ஆற்றகில்லாத எங்களுக்கு, உன் பசுக்களை மேய்ப்பதற்கு நீ போகும் செலவு விருப்பமில்லாத செயலாகும்; எங்கள் உயிரும் நெருப்பினைச் சார்ந்த மெழுகினைப் போன்று உருகி வேகின்றது. - (6) எம் உயிர் நெருப்பினைச் சேர்ந்த மெழுகினைப் போன்று உருக்குலைந்து வேகின்றது; வெள்ளிய வளையும் மேகலையும் கழன்று வீழவும், பரிசுத்தமான தாமரை மலர் போன்ற இரண்டு கண்களினின்றும் முத்துப் போன்று கண்ணிர் சோரவும், இரண்டு தடமுலைகளும் பசலை நிறத்தை அடையவும், தோள்கள் வாடவும், மாமணி வண்ணா! உன்னுடைய செங்கமலர் போன்ற நிறத்தை யுடைய மெல்லிய திருவடிகள் நோவும் படியாக நீ சென்று, பசுக்களை விரும்பி அவற்றின் பக்கல் உண்டான விருப்பத்தாலே அவற்றை மேய்க்கின்ற காலத்தில் உன் னோடு அசுரர்கள் வந்து போர் தொடுக்கில் அங்கு என்ன நேரிடுமோ? (7) பசு மேய்க்கும் அவ்விடத்தில் அசுரர்கள் வந்து சேர்வ ராயின் என்ன நேரிடுமோ என்று என் அரிய உயிர் துன்பத் திலே ஆழா நிற்கும்: ஆதலால், பசுக்களின் பின்னே செல்லேல்; ஈடுபாடும் ஆசையும் புணர்ச்சியும் உள்ளே கலந்து என்னை வருத்தும்; ஆதலால், அனைத்த என் கைகளை விட்டு அப்பாற் செல்லற்க; வசம் செய்யும் நின் தாமரைக் கண்களும் திருப்பவளமும் திருக் கைகளும் பொன்னாடையும் நான் காணும்படி காட்டிக் கொண்டு,