பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மா அடையும் பயன்கள் 85 திருப்பாவை ஆன்மா அடையும் பலன்களாகத் திருப்பாவையில் சொல்லப் படுபவனவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுவோம். "மாலே மணிவண்ணா' (26) என்ற இருபத்தாறாம் பாசுரத்தில் ஆயச் சிறுமிகள் கேட்பவையே ஆன்மா அடை யும் பயன்களாகும். அவர்கள் கேட்பவை: திருப்பள்ளி எழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; புறப்பாட்டுக்குப் பறை வேண்டும்; பறை கொட்டிக் கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண் டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழிக்க நாங்கள் அவர் கள் முகத்தில் விழித்துக்கொண்டு போம்படி கோல விளக்குகள் வேண்டும்; நெடுந் தூரத்திலே எங்கள் திரளைக் கண்டு சிலர் வாழு ம் ப டி முன்னே பிடித்துக் கொண்டு செல்வதற்குக் கொடி வேண்டும்; புறப்பட்டுப் போகும்போது பனி தலைமேல் விழாத படிக் காக்க ஒரு மேற் கட்டி வேண்டும். சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களையெல்லாவற்றையும் வைத்து ஒர் ஆலந்தவிரிலே கிடந்து செயற்கரிய காரியங்களைச் செய்யவல்ல உனக்கு இவை எங்கட்குக்குக் கிடைக்கச் செய்வது எளிதான செயலேயாகும். ஆய்ச்சிமாருக்குச் சங்காகவும் பறையாகவும் பல்லாண் டிசைப்பாராகவும் விளக்காகவும் கொடியாகவும் ஆக வேண்டும் என்று பிரார்த்தித்த படியாம். ஆலினிலையாய், ஆலின் நிலையாய் என்று பிரித்து, ஆலமரத்தின் நிழலில் பலர் ஒதுங்கி இன்புறலாமாகையாலே, ஆசாரியரை ஆலமரத்தின் நிலையையுடையவர் என்று கொள்ளலாம், "கூடாரை வெல்லும் (27) என்ற இருபத்தேழாம் பாசுரத்தில் மார்கழி நோன்பு தலைக்கட்டின பிறகு