பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. பயனை அடையும் வழிகள் ஆன்மா-புருஷார்த்தத்தை அடைவதற்காகவும் ஐந்து வழிகள் சொல்லப் பெறுகின்றன. அவை: கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், பிரபத்தியோகம். ஆசாரிய அபிமானம் என்பனவாகும். முதல் மூன்று நிலைகள் பக்தி நெறியில் அடங்கும். பேரன்பின் முதிர்ச்சியே பக்தி எனப்படும். இந்த பக்தியினை மேற்கொண்டார் பக்தர்பத்தர்-எனப்படுவர். பத்தரெனினும் பித்தரெனினும் ஒன்றே யாகும். உலகில் நோயால் கொள்ளும் பித்தும், மருளால் கொள்ளும் பித்தும் துன்பம் தருவன. அருளால் கொள்ளும் பித்து அளவிலா இன்பம் தருவது. 'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்ற சுந்தர மூர்த்தியடிகளின் திருவாக்காலும் பக்தர்களின் மேம் பாட்டினை உணரலாகும். குலசேகரப்பெருமாளும், பேதைமா மணவாளன்தன் பித்தனே (பெரு. திரு. 3:5) எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே (டிெ, 3:6) பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே (டிெ 3:7) பேயனாய் ஒழுக்தேன் எம்பிரானுக்கே (டிெ 3:8) 1. தேவாரம் 7-39; 10