பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அர்த்த பஞ்சகம் என்ற வாக்குகளால் தம்மைப் பித்தன்' என்றும் பேயன்’ என்றும் கூறிக் கொள்வதனால் இதனை மேலும் தெளிய லாம், இந்த பக்தி நிலையை மெய்விளக்க அறிஞர்கள் 'பக்தியோகம் என வழங்குகின்றனர். இந்த பக்தி யோகத்தை எட்டு அங்கங்களாக முறைப் படுத்தி வகுத்துக் காட்டுவர் வேதாந்த தேசிகர். அவற்றுள் 1. இயமம் என்பது, அகிம்சை, சத்தியம், திருடாமை, காமத்தை அடக்குதல், பொருளைச் சேர்க்க முற்படாமை ஆகிய நிலை; 2. நியமம் என்பது, தூய்மை, உள்ளதைக் கொண்டு மன நிறைவு பெறுதல், விரதம், தவம் முதலியன செய்தல், வேதாந்த பரிசயம் செய்தல், எழிலாச் செயல் களையும் இறைவனிடம் சமரிப்பித்தல் ஆகிய நிலை; 3. ஆசனம் என்பது, பதுமாசனங்கள் முதலிய ஆசனங்கள் செய்யும் நிலை; 4. பிராணாயாமம் என்பது புலன்களை உலக விஷயங்களுரிைன்றும் திருப்புதல் நிலை; 6. தாரணை என்பது, பகவானுடைய திருமேனியை மனத்திற் கொள்ளும் நிலை; 7. தியானம் என்பது, இடைவிடாது இறைவனை நினைத்தல் நிலை; ஒ. சமாதி எனபது, இறைவனை நேரில் கண்டாற் போன்ற நிலையினை அடை தல் நிலை. இந்த எட்டு அங்கங்களையுடைய பக்தி நெறி வழியொழுகுவார்க்குப் பிராட்டிக்கு ஆராவமுதமாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாகி வீடு பேற்றை அளிப்பான். விளக்கம் : இந்த எட்டு அங்கங்களையுல் ஈண்டு விளக்குவேன். இயமம் : பிரமசரியம், அகிம்சை, அஸ்தேயம், அபரிக்கிரகம் என்னும் ஐந்தும் இதனுள் அடங்கும் 2. தே. பி. 84 இன் உரை