பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடையும் வழிகள் 91 (1) பெண் இன்பம் துறத்தல் பரமசரியம்; (2) எல்லா உயிர்க்கும் தீங்கு செய்யாமை அகிம்சையாகும்; (3) பிறர் பொருளை மனத்தாலும் கவர நினையாமை அஸ்தேயம் ஆகும்; 141 பிறர்க்கும் நலம் தரும் இயமம் மொழி சத்தியம். பொய்மையும் வாய்மை இடந்த புரைதீர்ந்த, நன்மை பயக்கும் எனின் (292) என்ற பொய்யாமொழி யுடன் ஒப்பிட்டுச் சிந்திக்க, (5) மது, ஊன் முதலிய இழி பொருள்களை உண்ணாமை அபரிக்கிரகமாகும். நியமம் : சுவாத்தியாயம், செள சம்ய மகிழ்ச்சி, தவம், நியதாத்மம் என்னும் ஐத்தும் இதனுள் அடங்கும். (1) நான் மறைகளை ஒதுதல் கவாத்தியாயம் (2) உடலை மண்ணாலும் நீராலும், மனதை வாய்மையாலும் தூய தாக்குதல் செளசம். புறந் தூய்மை நீரான் அமையும் அகந்தாய்மை, வாய்மையால் காணப்படும் (298) என்ற வள்ளுவத்தை ஈண்டு நினைவுகூர்க; (3) பெற்றது கொண்டு மனநிறைவு கொள்ளுதல் மகிழ்ச்சி, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற ஆன்றோர் வாக்கை உன்னுக, (4) உபவாசம் முதலியன மேற் கொள்ளுதல் தவம். (5) தெய்வத்தை வழி படுதல் நிய தாத்மம் ஆகும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று' (கொன்றை வேந்தன்-2), 'திருமாலுக்கு அடிமை செய்’ (ஆத்திசூடி-57), சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை (நல்வழி - 15) என்ற ஒளவைப் பாட்டியின் பொன்மொழிகளைப் போற்றுக. ஆசனம்: பத்திராசனம், கோமுகாசனம், பதுமாசனம், சிம்மாசனம், மயூராசனம், குக்குடாசனம், சுவததிகாசனம் என ஆசனம் பல வகைப்படும். இவற்றின் நுட்பங்களை யும் செய்யும் முறைகளையும் ஆசனங்களை விளக்கும் 'அடயோகப் பிரதீபிகை முதலிய யோக நூல்களில் கண்டு தெளியலாம்.