பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9? அர்த்த பஞ்சகம் பிராணாயாமம்: மூச்சுமூலம் உயிர்க் காற்றை உள் ளுக்கு வாங்கி ஒரு கணக்குப்படி நிறுத்தி வெளிவிடுவது பிராணாயாமம். உயிர்க் காற்றை மூக்கின் ஒரு பகுதியால் உள்ளுக்கு இழுத்தல் பூரகம். அதனை உள்ளே அடக்கி நிறுத்துதல் கும்பகம். தொடர்ந்து அதனை மூக்கின் மறு பகுதியால் வெளிவிடுவது ரேசகம். பிரத்தியாகாரம்: சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்ற ஐம்புலன்கள் அடங்கும்படி மெய் வாய் கண் மூக்கு. செவி என்னும் ஐம்பொறிகளைத் தடுத்து உள்நோக்கி இருத்தல் பிரத்தியாகாரம். 'செயற்கரிய செய்வர் பெரியர்' ( 26) என்ற வ ள் ளு வர் குறிப்பிடுவது இதனைத் தானோ என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. தாரணை: இறைவனிடம் இடையறாது தைலதாரை போல் மனம் ஒன்றியிருத்தல் தாரணை. பக்தி யோகத்தின் நிலை இதுதான் என்று கருதலாம். தியானம்; தாரணையிள் முதிர்ச்சி நிலையே தியானம் (Meditation) ஆகும். ஐம்படைகளுடனும் பல்வேறு அணி கலன்களுடனும் பெரிய பிராட்டியாருடன் கூடிய இறை வனது திவ்வியமங்களத் திருமேனியை அல்லது அவனது அனந்த திருக்குணங்களை இடைவிடாமல் நினைத் திருப்பது அதுவாகும். - சமாதி; புலன் இன்பத்தால் வரும்ஆசை முற்றும் ஒழிந்து இறைவனிடம் ஒருமுகமாக ஈடுபட்டிருப்பது சமாதியாகும். வில்லிபுத்துாரார் வருணிக்கும் அருச்சுனனின் தவக்கோலம் ஈண்டு நினைவு கூர்தல் தகும்.” 3. விள்லிபாரதம் - அருச்சுனன் தவநிலை-செய் 37, 38, 41 காண்க இதன் விளக்கம் பாட்டுத் திறன் என்ற இவ்வாசிரியரின் கவிதை அநுபவமாகும் முறை' என்ற இயலில் கண்டு தெளிக.