பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அர்த்த பஞ்சகம் பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய வாச கம்செய் மாலையே வான்பட் டாடையும் அ.தே; தேசம் ஆன அணிகலனும் என்கை கூப்பும் செய்கையே (திருவாய் 4.3: 2) (சாந்து-சந்தனம்; கண்ணி-மாலை) என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அவருடைய பக்தி நிலையைக் கண்டு அநுபவிக்கலாம். மெய் விளக்க அறிஞர்கள் இப்பக்தி நெறி கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்ற மூன்று நிலைகளில் பயிற்சி அடைய வேண்டிய நெறி என்றும் கூறுவர். - (1) கர்மயோகம்: சாத்திரங்களைப் பயின்ற அறி வினால் சில சடங்குகளையும் கடமைகளையும் தவறாது செய்தல் வேண்டும். இவற்றுள் நித்திய கருமங்களும் நைமித்திய கருமங்களும் அடங்கும். நித்திய கருமங்கள் என்பன சந்தியாவந்தனம், பகவதாராதனம் போன்ற நாடோறும் செய்யப் பெறுபவை: நைமித்திய கருமங்கள் என்பன கிரகணம், கார்த்திகை, சங்கராந்தி, ஆவணி அவிட்டம் போன்ற விசேட நாட்களில் மேற்கொள்ளப் பெறும் கருமங்களாகும். இறைவனை ஏத்தல், திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளல், அறம் புரிதல் போன்றவை யாவும் கரும யோகத்தில் அடங்கும். யாதொரு பலனை யும் எதிர் பாராது செய்யப்பெறும் கருமத்தால் மனம் தூய்மையடைகின்றது. இஃது ஆன்மா தியானத்தில் அழுந்த வழியாகவும் அமைக்கின்றது. பரிவது இல் ஈசனைப் பாடி - விரிவது மேவல் உறுவீர்! பிரிவகை இன்றிகல் நீர்துய் புரிவதும் புகை பூவே (திருவாய் 1.6: 1).