பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் 95. என்ற பாசுரத்தில் பலனை எதிர் பாராது இறைவனுக்குச் செய்யப்பெறும் கருமம் கூறப் பெறுகின்றது. இறைவன் ஆராதனைக்கு எளியவன் என்பதும் இதனால் பெறப் படுகின்றது. எளியவனா யிருப்பதுடன் ஆராதிப்பாருக்கு இனியவனாகவும் இருக்கின்றான் இறைவன் என்பதை, ஆயர் கொழுந்தாய், அவரால் புடையுண்ணும் மாயப் பிரானைஎன் மாணிக்கச் சோதியை தூய அழுதத்தைப் பருகி பருகி.என் மாயப் பிறவு மயர்வு அறுத்தேனே. (1.7: 3} ஆயர்-இடையர் மயர்வு-அஞ்ஞானம்) என்ற பாசுரத்தால் தெரிவிக்கின்றார் ஆழ்வார். இக் கரும யோகத்தினால் தன்னை மறத்தல், மனதைக் கட்டுப் படுத்தல், ஆன்மாதுபவம் பெறல் போன்ற நிலைகள் ஏற்பட்டு சமுசாரத்தில் ஆழ்ந்திருக்கும் ஆன்மா தூய்மை யுறுகின்றது. - (2) ஞானயோகம்: கர்மயோகத்திற்கு அடுத்த நிலை ஞானயோகம் என்பதாகும், இந்த நிலையை, ஞானத்தில் நன்குணர்ந்து காரணன்தன் நாமங்கள் தானத்தில் மற்று.அவன்பேர் சாற்றினால், வானத்து அணிஅமரர் ஆக்குவிக்கும் (இரண். திருவந் 2) (தானம்-அன்பின் முடிவான இடம்; சாற்று தல் - அநுசந்தித்தல். அணி அமரர் - நித்திய சூரிகள்; என்று பூதத்தாழ்வார் பேசுகின்லார். கர்மயோகத்தில் தூய்மையடைந்த ஆன்மா இந்நிலையில் தியானத்தில்