பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 அர்த்த பஞ்சகம் ஆழங்கால் படுகின்றது. முன்னர்க் குறிப்பிட்ட இயமம் நியமம் போன்ற செயல்களால் ஆன்மா அமைதி நிலையை நாடுகின்றது. அலைந்து திரியும் மனத்தை அங்ங்ணம் அலைய விடாமல் நிலைநிறுத்தும் நிலை ஏற்படுகின்றது. அதாவது மெய்விளக்க அறிஞர்கள் குறிப்பிடும் கைவல்ய நிலை உண்டாகின்றது. இந்த யோகத்தினால் தன் ஆன்மா இன்னது என்று தனக்குல் புலனாவது போல எல்லாச் சீவர்களிடமும்-ஆன்மா என்ற ஒன்று இருப்பது தட்டுப் படுகின்றது. எல்லா ஆன்மாக்களும் சமம் என்ற உண்மை யும் பளிச்சிடுகின்றது. தியானத்தின்மூலம் ஆன்மாதான் உண்மை நிலையை உணர்ந்து தான் இறைவனைச் சுார்ந் திருக்கும் நிலையை அறிகின்றது. அதன்பிறகு அஃது இறைவனை அடைய அவாக் கொள்ளுகின்றது. கையபொன் ஆழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் கான் மையவண்ணா! மணியே முத்தமே! என்றன் மாணிக்கமே! -- (திருவிருத், 84) 1கைய-கைகளிலுள்ள மைய மையுடைய நிறம் போன்ற) என்ற பாசுரத்தில் பராங்குச நாயகி எம்பெருமானாகிய நாயகனைக் காண விரைகின்றாள். தனிமையில் கண்டு கூடிக் குலாவி இன்புற வாய்ப்பில்லை யாயினும் ஆடவரும் மகளிரும் பலர் கூடிய கூட்டத்திலாயினும் காணப் பெற்றாலும் அதுகொண்டு ஆறியிருப்பதாகச் சொல்லு கின்றாள். நாயகனையே இடைவிடாது நினைத்துக் கொண்டிருந்து, அந்த நினைப்பு மிகுதியால் அவன் எதிரில் நிற்பதாகப் பாவித்து மைய வண்ணா, மணியே, முத்தமே, மாணிக்கமே என்று முன்னிலைப் படுத்திப் பேசுகின்றாள். இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் நாயகி 'என் ஆசையை அடக்க மாட்டாமல் வினையொடும்