பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் 97 எம்மொடும் நொந்து, கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனம்' (திருவிருத் 64) என்கின்றாள். ஈண்டு கனி - பகவதநுபவத்தாலாகும் இனிய ஆனந்தத்திற்கு உவமை, கட்டிளமைத்தாய்துகரும் செவ்வியல்லாத காய் அவ்வளவு இனிய தல்லாத நமோச் சரண மாத்திரத்திற்கு உவமை. காயின் முதிர்ச்சி கனியா தல் போல் நமோச்சரணத்தின் பயன் அநுபவாநந்தமாகும் என்பது உவமையால் உய்த்துணரலாகும் என்பதை அறிந்து மகிழவேண்டும். இந்த அவர் படிப்படியாக வளர்ந்து பேருருவம் கொள்வதை அவர்தம்பாசுரங்களால்: அறிகின்றோம். இந்நிலையிலும் ஆன்மா தியானத்தில் அழுந்துகின்றது. இந்த உயர் நிலையில் எல்லா உயிர்களிடையேயும் ஊடுருவி நிற்கும் பரமான்மாவின் சாயல் தோன்றுகின்றது. இது திடீரென்று தோன்றி மறையும் நிலையாகும். (3) பக்தியோகம்: ஞானயோகத்திற்கு அடுத்த நிலை பக்தியோகம்’ என்பது. இந்த நிலையிலும் தியான நிலை உண்டு. இந்தத் தியான நிலையில்தான் ஆன்மா தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பினை அறிகின்றது. இது ஞான நிலையின் இறுதிப் படியும் பக்தி நிலையின் முதற் படியுமாகும். உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கேற்றி வைத்துஅவனை காடி வலைப்படுத்தேன் (மூன். திருவந். 94) 4. திருவாசிரியம் 2; பெரியதிருவந் 8; திருவாய். 5.3: 4; 7.3:6,8; 10.2:2; 10.10:10. அ.-7