பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் 99 அதுவே பிரபத்தி நெறியாகும். இதனை வேதாந்த தேசிகர், அந்தணர் அந்தியர் எல்லையில் கின்ற அனைத்துலகும் கொங்தவ ரேமுத லாக நுடங்கி அனன்னியராய் வந்தடை யும்வகை (தே.பி. 56) [அந்தியர் - சண்டாளர்; .ெ த ந் த வ ர்(சமுசாரத்தில்) வருந்தியவர்; துடங்கி-துவண்டு போய், அனன்னியர் - வேறுபலனையும், வேறு இரட்சகரையும் கொள்ளாதவர்; அடையும் வகைசரணம் அடையும் நெறி) என்று சிறப்பித்துப் பேசுவர். இந்நெறி சரணாகதி', 'பரநயாசம் “பரசமர்ப்பணம்’, ‘உபயா துல்டானம்', என்ற பெயர்களாலும் வழங்கப்பெறும். சமுசார தாபத் தால் வருந்தி வேறு உபாயத்தையும் வேறு பலனையும் வேறு தெய்வத்தையும் நாடாத யாவரும் இந்த நெறியைக் கடைப்பிடிக்க அதிகாரிகளாவர். பகவத்கீதையின் முடிவில் சரமசுலோகத்தில் (கீதை 18:66) பேசப் பெறுவதும் இந் நெறியேயாகும். மணிவாசகப் பெருமானும் இச்செந் நெறியைக் குறிப்பிடுகின்றார் (திருவா. அடைக்கலப் பத்து). இஃது அடிகளாரின் அநுபவமாக வெளிப்படு கின்றது. 5. பிரபத்தி-சரண் அடைதல்; பிர-சிறப்பு பது செல்லல், அடைதல்; பிரபத்தி-சிறப்பாக அடை தல்; சிறப்பாவது மனத்தால் அடைதல்; இது சரண் அடைதல் எனப் பொருள்படும்.