பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடையும் வழிகள் IO 5 (சேஷி - இறைவன்; சேஷ பூதன் - சேததன் பிரஜை - குழவி) என்ற முமுட்சுப்படியின் வாக்கியமும் சிந்திக்கத் தக்கது. பாலுண்ணும் பச்சைக் குழவி எங்ங்னம் தாயினுடைய மற்ற அவயவங்கள் யாவையும் விட்டு, தான் உயிர்வாழ் தற்கிடனாய் உள்ள அவள் கொங்கையிலே வாய் வைக்கின் றதோ, அங்ங்னமே சேஷியாகின்ற எம்பெருமானுடைய பல உறுப்புகளையும் விட்டு, தான் உய்தற்கு இடனாய் உள்ள அவன் திருவடிகளையே சீவன் (சேதநன்) பற்று கின்றான் என்பதை இந்த வாக்கியம் அழகாகப் புலப் படுத்துவதை அறியலாம். முந்திய செயல் எவ்வாறு குழந்தைக்கு இயல்பாய் அமைந்ததோ. அவ்வாறே பிந்திய செயலும் சேதநனின் சொரூபத்திற்கு இயல்பாய் அமைந்துள்ளது. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் பெரு மக்கள் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்னும் இறைவனுடைய ஐந்து நிலைகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று கண்டவர்கள். இந்த ஐந்து நிலைகளிலும் காக்கும் இயல்பினதும், அடையத் தக்கதும், எல்லாத் திருக்குணங்களும் நிறைந்ததுமான இடம் அர்ச்சாவதாரமே என்று தெளிந்தவர்கள். இவர்கள் 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதற்குப்' (திருவாய் 3-3:1) பதறிப் பல காலும் பிரபத்தி பண்ணுகின்ற அளவில் பல இடங்களிலும் அர்ச்சாவதாரத்தில்தான் பிரபத்தி செய்தனர் என்பது ஈண்டு அறியப்படும். "ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே' (33) என்பது பூர்வசனபூஷண வாக்கியம். முமுட்சுப்படியிலும்,