பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அர்த்த பஞ்சகம் --سمبسمب மொழியில் விளக்கப்பெறுகின்றது. ஆழ்வார் தம் கையில் ஒன்றும் இல்லாமையை அறிவித்து அவன் திரு வடிகளில் சரணம் புகுகின்றார். செய்த கர்ம யோகத்தையுடையேன் அல்லேன்; ஞான, யோகத்தையுடையேன் அல்லேன்; அப்படியானா லும் இ னி உன்னைப் பிரியச் சிறிதுபொழுதும் பொறுக்க மாட்டுகிற்கின்றிலேன்; ஆதிசேட சயனத்தை யுடைய அம்மானே! சேற்று நிலங்களிலே தாமரைகள் செந்நெற் பயிர்களுக்கு நடுவில் வளர்கின்ற சிரீவர மங்கை என்னும் திவ்விய தேசத்தில் வீற்றிருக்கின்ற எந்தையே! காப்பாற்றுகின்ற உனக்கு அங்கே புறம்பு அல்லேன். (1) ஒரு சாதனத்தைச் செய்து முத்தியை அடைய அரு கதை உடையவன் அல்லேன்; சாதனத்தைச் செய்கின்ற வர்களில் ஒருவனாகவும் இல்லேன்; உன்னைக் காண வேண்டும் என்கின்ற ஆசையிலே அகப்பட்டு நான் உபாயங்களை மேற்கொள்வதற்குரிய ஆற்றலுடைய வனும் அல்லேன்: இலங்கையை அழித்த அம்மானே! சந்திர மண்டலம் வரையிலும் பொருந்தும்படி மாணிக்கங் கள் பதித்த மாடங்கள் உயர்ந்திருக்கின்ற சிரீவர மங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற, திருவாழி திருச்சங்கு களை உடையவனே! வேறு துணையில்லாத எனக்குக் கிருபை செய்தருள வேண்டும். (2) கருடக்கொடியினையும் சக்கரப்படையினையுமுடைய வைகுந்த நாடனே! எம் கார்முகில் வண்ணனே! பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்; நான்மறைகளிலும் வல்லவர்களான தத் துவ ஞானத்தையுடைய சிரீவைணவர்கள் பலர் வாழ் கின்ற சிரீவர மங்கல நகரத்திற்குத் திருவருளைச் செய்து