பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடையும் வழிகள் 107 அங்கே தங்கியிருக்கின்றவனே! ஒரு பிரதியுபகாரத்தை யான் அறியேன். (3) ப கை வ ர் க ள ா க ச் சேர் ந் த சேனையையுடைய துரியோதனன் முதலிய நூறு பேர்களும் அழியும்படி, தனியரான பஞ்சபாண்டவர்களுக்காக வஞ்சனையை யுடைய போரைச் செய்து சாம்பலாகச் செய்த என் தந்தையே! பிரளயம் கொண்ட பூமியை எடுத்து வந்த அம்மானே! தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற சிரீவர மங்கல நகரிலே குடியேறி வீற்றிருக்கின்றவனே! உன்னை அடைவதற்கு எந்த விதமான முயற்சியைச் செய்வேன்?(4) பேற்றினைப் பெறுவதற்கு நான் உன்னை அழைத் தல் எனக்குத் தகுதியாகுமா? எவ்வகைப் பட்ட பகைவர் கூட்டத்துள் நீயும் ஒருவனாகச் சேர்ந்து புத்த முனியாய் நின்று வஞ்சகமாகக் காரியங்களைச் செய்த கரிய மேனியை யுடைய அம்மானே! ஐவகையான யாகங்களைச் செய்தவர்களும் பூதேவர்களுமான சிரீ வைணவர்கள் நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற சிரீவரமங்கல நகரிலே எல்லாரும் கைகூப்பி வணங்கும்படியாக எழுந்தருளி யுள்ளாய்; அதனை அடியேனும் கண்டேன். (5) பிரளயம் கொண்ட நிலத்தை வராகமாகி எடுத்த என் அப்பனே! கண்ணபிரானே! எப்பொழுதும் என்னை அடிமையாக ஆளுகின்ற தெய்வ நாயகனே! அழகிய மாணிக்கத்தினது சுடரே! தேனையுடைய மாமரச் சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த சிரீவரமங்கலத்திலிருப்பவர் கள் கை கூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்ற வானமாமலையே! அடியேன் வணங்கும்படி வந்தருள் GłłFT ULİ fT :S. (6)