பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II & அர்த்த பஞ்சகம் எம்மானே! பரிசுத்தமான சொரூபத்தையுடையவனே! என்னை ஆள்கின்றவனே! எத்தகைய பெருமை பொருந்திய உருவங்களையும் விரும்பும் வகையில் மேற்கொள்ளுகின்ற வனே! அழகிய ஏறே! சிவத்த பெரிய தாமரை மலர்கள் செழுமை பொருந்திய தண்ணிர் மேலே கண்கள் போன்று மலர்கிலற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை மூடிக் கொண்டு உறங்குகின்றானே! நான் என் செய்வேன்; (2) நான் என்ன காரியத்தைச் செய்வேன்? துணையாவார் வேறுயாவர்? என்னை என் செய்ய இருக்கின்றாய்? உன்னால் அல்லாமல் மற்றையோரால் ஒரு குறையும் விரும்பேன். வேலைப்பாடு அமைந்த மதிள்களால் சூழப்பட்ட திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற வனே! அடியேனுடைய ஆன்மா இந்த உடலோடு சேர்ந்து வாழ்ந்திருக்கும் நாள், தொடர்ந்து செல்லுகின்ற நாட்கள் எத்துணை உண்டோ அத்துணை நாட்கள் எல்லாம் உன் திருவடிகளைப் பிடித்துக் கொண்டே நடக்கும்படி திருவருள் புரிய வேண்டும். (3) மேலே போகக் காணவல்ல ஆற்றலுடையவர்கள் காணவல்ல அளவுக்கும் அப்பால் போகும்படியான கீர்த்தியையுடையவனே முடிவு இல்லாதவனே! எல்லா உலகங்களையுமுடைய ஒப்பற்ற மூர்த்தியே! பக்தியினால் மேம்பட்டவர்கள் தங்கியிருக்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே கண் வளர்கின்றவனே! உன்னைக் கானும் பொருட்டு நான் அலமந்து ஆகாயத்தை நோக்கி அழுவேன்; தொழுவேன். - . (4} கலக்கததாலே அழுவேன்; தெளிவாலே தொழுவேன்; மயக்கத்தால் ஆடுவேன்; குணங்களுக்குப் பரவசப்பட்டுப் பாடுவேன்; துன்பத்தால் அலற்றுவேள்; என்னைந் தழுவி