பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 அர்த்த பஞ்சகம் போக்கா தொழிவாய்; துணையாவார் வேறு ஒருவனையும் உடையேன் அல்லேன், சரீரம் தளர்ந்து என் உயிரும் இந்த உடலை விட்டு நீங்கிப் போகின்ற காலமாயிற்று; தளராமல் உன் திருவடிகளை ஒருபடிப் படம் பிடித்துச் கொண்டு போவதற்கு நீ இசைய வேண்டும். (8) என்னை உடன்படச் செய்து உனது திருவடிகளிலே சேரச் செய்த அம்மானே! அழிதல் இல்லாத நித்திய சூரிகளுக்குத் தலைவரான சேனை முதலியாருக்குத் தலை வனே! திசைகளில் எல்லாம் ஒளியை வீசுகின்ற செழுமை பொருந்திய சிறந்த இரத்தினங்கள் சேர்ந்திருக்கின்ற திருக் குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே, வருத்தம் இல்லாதவாறு உலகம் பரவும்படி திருக்கண் வளர்கின்ற வனே! நான் காணும்படி நீ வரவேண்டும். (9) புறத்தினும் காணும்படி வாராமல் அருவாய் மனத்தின் கண் தோன்றிக் காட்சி அளிக்கின்றவனே! அழிதல் இல்லாத திருமேனியை உடையவனே! ஆரா அமுதம் போன்று அடியேனுடைய நெஞ்சுக்குள்ளே தித்திக்கின்ற வனே! தீராத வினைகள் எல்லாம் தீரும்படியாக என்னை அடிமை கொண்டவனே! திருக்குடந்தையாகிய திவ்விய தேசத்தையுடையவனே உனக்கு அடிமைப் பட்டும் இன்னமும் இங்கே அடியேன் அலைந்து திரிவேனோ? (10) (3) திருவல்லவாழ் செ ல் லு த ைல த் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல். இது மானேய் நோக்கு' (5.9) என்ற திருவாய்மொழியால் விளக்கம் பெறுகின்றது. இத்திருவாய்மொழி நாயகி பாவனையில் தோழியரை நோக்கி தலைவி கூற்றாக நடை பெறுகின்றது. மான்பார்வை போன்ற பார்வையுடைய பெண்களே!

    • A- t o + * வினையேன் நாள்தோறும் மெலியும்படியாக ஆகாயம்