பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ix

நம்பன் அவர் கணேசனார்
காரைக்குடி நகர்சிறக்க
அம்புவியோர் தாம்போற்ற
கல்லூரி அங்கமைத்தார்.

7. அங்கமைத்த அழகப்பா
கல்லூரி முதல்வரிவர்
தங்குபுகழ் செந்தமிழின்
திறந்தேர்ந்து ஆங்கிலமும்
பங்குபெறப் பயிற்றுவிக்கும்
பாவலராய்ப் பலநூல்கள்
சிங்காமல் எடுத்தெழுதிச்
சிந்திக்கும் பணியேற்றார்.

8. பணியேற்ற பண்பாளர்
பார்புகழ வளர்கின்றார்
மணிவண்ண மாதவனார்
மாமலையாம் வேங்கடத்தின்
அணிசேர்க்க அழைத்தனால்
வாழ்வின்முடி யதுவெனவே
துணிந்தங்கே பல்கலையின்
தமிழ்த்தலைமை யோற்றிட்டார்

9. தமிழ்த்தலைமைத் தொண்டர்தாம்
தந்தநூல் பலவாகும்
தமிழகத்துள் இவர்போன்று
நாளெல்லாம் ஆய்வெழுதிச்
சிமிழ்க்காமல் செப்புகின்றார்
சிலருளரோ எனக்கேட்டுக்
கமழ்கின்ற மணங்கண்டு
களிப்புறுவோம் நாமிங்கே.

11