பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடையும் வழிகள் 113 வரையிலும் உயர்ந்திருக்கின்ற வளவிய பாக்கு மரங்களும் தேன் பொருந்திய மல்லிகை வாசனை வீசுகின்ற தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் என்ற இவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேசுவரனு டைய திருவடிகளிலே அடியேன் சேர்வது என்று சொல்? (1) தோழிeர்காள்! என்னை வருத்தி என்ன காரியத்தைச் செய்தீர்கள்? பொன்னைப் போன்று விளங்குகின்ற புன்னை என்ன, மகிழ் என்ன, புதிய மாதவி என்ன, இவற்றின்மேலே பொருந்தித் தென்றலானது வீசுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய திருவடி களில் பொருந்திய நீற்றினை (பாதரேணுவை) நாங்கள் கொண்டு சூடுவது என்று கொல்? (2) மலர்களைச் சூடிக்கொண்டிருக்கின்ற கூந்தலை யுடைய தோழிமீர்காள்? பிரிவின் துன்பத்தில் வருந்துகின்ற யான், மேலும் மேலும் மெலியும்படியாகப் பாடுகின்ற சிறந்த வேதங்களின் ஒலியானது கடலின் அலைகள் முழங்குமாறு போன்று முழங்க, பக்கங்களில் உயர்ந்து எழுகின்ற ஒமப் புகையானது வாசனை வீசுகின்ற தண்ணிய திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் நித்தியவாசம் செய்கின்ற எம்பெருமானுடைய திருவடி களை நாள்தோறும் காண்போம் கொல்லோ? (3) தோழிமீர் காள்! என்னை நீங்கள் நாள்தோறும் வருத்தி என்ன காரியத்தைச் செய்தீர்கள்? பசிய இலை களையுடைய நீண்ட பாக்கு மரங்களும், பலா மரங்களும், வாழைகளும், மச்சினையுடைய அழகிய மாடங்களின் மேலே புல்லிக் கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் அ.-8