பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடையும் வழிகள் II5 நல்ல நெற்றியையுடைய பெண்களே! எல்லாவிடங் களிலும் அரைக்கப் படுகின்ற மதுரம் பொருந்திய கரும்பு களும் வளைந்திருக்கின்ற செந்நெற்பயிர்களுமாக, பக்கங் களில் பொருந்தியிருக்கின்ற அழகிய குளங்களையும் அவற்றைச் சார்ந்து சூழ்ந்திருக்கின்ற வயல்களையும் உடைத்தாயிருக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்தில் நித்தியமாக எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய நிலம் தாவிய நீண்ட திருவடிகளை, நாள் தோறும் இடையீடு இல்லாமல் தொழுவதற்குக் கூடுமோ? (8) இளமை பொருந்திய அழகிய வண்டுகள், குளிர்ந்த சோலையில் தேனைக் குடித்துக் குழலைப் போலவும் யாழைப் போலவும் இசைப் பாடுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சுழலின் மலி சக்கரப் பெருமானுடைய தொல் அருளால், சுழல்கின்ற வளையல்கள் தங்கும்படியாக நாம் கண்டு. தொழுவதற்குக் கூடுமோ? (9) தோழிeர்காள்! எம்பெருமானுடைய தொல் அருளை மண்ணுலகமும் விண்ணுலகமும் அ. து ப வி த் து த் தொழும்படி நின்ற திருநகரம், எம்பெருமானுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடிப் பேசுகின்ற நல்ல அருளையுடைய ஆயிரம் சிரிவைணவர்கள் தங்கியிருக் கின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந் தருளியிருக்கின்ற நல்லருளையுடைய நம்பெருமான் நாராயணனுடைய திருநாமங்களை, எம்பெருமானுடைய தொல்லருளால் உண்டான புண்ணியத்தாலே சொல்லு வதற்குக் கூடுமோ? (10) (4) ஆழ்வார்தாம் சேர்ந்து அநுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல், இது பிறந்த