பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் 117 நீர் மிகும்படி அச்சங் கொண்டு நின்ற நிலையும் வந்து என்னுடைய மனத்தில் உருக்கா நின்றன. (3) - வஞ்சனை பொருந்திய வேடத்தைக் கொண்டு திரிபுரத்திலே புகுந்த வீரமும், அங்குள்ள அசுரர்களோடு கலந்து அவர்களுடைய மனங்களை வேறுபடுத்தி உயிர் களைப் போக்கிய உபாயங்களும், கங்கையைத் தரித்த சடையையுடைய சிவபிரானும் உன்பக்கல் வேறு அல்லாதபடி விளங்க நின்றதும் என் மனத்திற்குள்ளேபுக்கு என் உயிரை முடித்து நிற்கின்றன. (4) தேவர்கட்குத் தலைவனான இந்திரன் உண்ணுவ தற்கு ஆயர்கள் சித்தம் செய்த உணவினைப் புசித்ததும், பல நிறங்களையுடைய பெரிய கோவர்த்தன மலையை எடுத்து ம ைழ யி ல் நனையாதவாறு ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்ததும், பூலோகத்தை முன்னே உண்டாக்கிப் பி ர ள ய காலத்தில் புசித்து மீண்டும் உமிழ்ந்ததும், திரிவிக்கிரமனாய் அளந்ததும், வராகமாகி இடந்து சேர்ந்ததுமான ஆச்சரியம் பொருந்திய செயல் களை நினைக்குந்தோறும் என் மனம் அவற்றிலேயே நிலை பெற்று நெருப்பில் அகப்பட்ட மெழுகினைப் போன்று உருகா நிற்கும். (5) பிரளய காலத்தில் உலகத்தைப் புசித்த ஒண்சுடரே! நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைத் தற்கு அரியனவாய் இருக்கின்றன; ஒருபடித்தாகாத உருவத்தையுடையவனாய் அநுபவித்தற்கு உருத் தெரி யாதவனாயிருக்கின்ற உன்னுடைய செயல்களை நின்று நினைக்கின்றேனாகிய நான் உன்னை எப்படி நினைப் பேன்? பாவத்தைச் செய்த எனக்குச் சிறந்தது ஒர் உபாயத்தைச் சொல்லுவாய். (6)