பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 18 அர்த்த பஞ்சகம் உண்மையோடு வந்து ஒண்சுடராய் நின்றவாறும் இன்மையோடு வந்து இருளுமாய் நின்றவாறும், என் கண்களால் காண முடியாதவாறு உள்ளே மறைந்து நின்று நீ செய்கின்றவற்றையும் எண்ண வேண்டும் என்று கொண்ட மனத்தோடு வருந்தா நின்றேன்; என் கரிய மாணிக்கமே! உன் திருஉருவினை என் கண்களால் நன்கு காணும்படி ஒருநாள் திருவருள் புரிதல் வேண்டும். (7) அழகிய வடிவத்தோடு மகாப் பிரளயத்தில் திருக் கண் வளர்ந்தருளின படியும், திருவுந்தித் தாமரையிலே பிரமனாகிய சரீரத்திலே அந்தரான்மாவாக எழுந்தருளி யிருந்து எல்லாவற்றையும் உண்டாக்கின செயல்களு மாகிய, ஒப்பு இல்லாத உன்னுடைய தனித்த தலைமை பொருந்திய செயல்களைக் கேட்குந்தோறும் என் நெஞ்ச மானது ஒருபடிப்பட நின்று நிலை குலைந்து கண்ணிர் அருவிபோன்று விழா நின்றது; அடியேன் என்ன செய்வேன்? (8) மூன்று அடி நிலத்தை யாசித்த விதமும், யாசித்த அவ்விடத்திலேயே நின்று கொண்டு ஆழ்ந்த கடல்களை யும் பூலோகத்தையும் தெய்வ லோகத்தையும், இரண்டு அடிகளிலே முடியும் படியாக அளந்து முடித்துக் கொண்ட முக்கியமும், அவற்றைச் சொல்லும்விதம் கேட்குந்தோறும் என் நெஞ்சமானது உன்னுடைய சீல குணத்திலேயே கரைந்து உருகாநின்றது; மிகக் கொடிய பாவியேனான நான் தேவரீரைக் கூடுவது என்று கொல்? (9) தேவர்கள் என்ன, அசுரர்கள் என்ன, இவர்களோடு கூடித் திருப்பாற் கடலைக் கடைந்த விதமும், அதினின் றும தோன்றிய அமுதத்தைத் தேவர்களே உண்னும்