பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் I 19 படி, அசுரர்கள் அதனை விடக் கூடிய காரியங்களையே செய்துபோன ஆ ச் சரி யமும் என் சரீரத்திற்குள் நுழைந்து என் உயிரை உருக்கி உண்டிடுகின்றன: நச்சு நாகணையானே! உன்னை அறியும்தன்மையைச் சொல் லாய் (10) இந்த நான்கு திருப்பதிகங்களாலும் ஏதோ ஒரு வகையில் பயனை அடையும் வழியாகப் பிரபத்தி நெறியை குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம். திருப்பாவை ஆன்மா அடையும் வழிகளாகத் திருப்பாவையில் சொல்லப் படுவனவற்றை ஈண்டு எடுத்து காட்டுவோம். 'ஏற்ற கலங்கள் (21) என்னும் இருபத்தொன்றாம் பாசுரத்தில் ஆற்றப் படைத்தான் மகனே' என்று கண்ணனை விளிக்கின்றனர். ஆய்ச்சிகள் பலகாலும் கண்ணபிரானை விளிக்கும்போது, 'நந்த கோபன் மகனே! என்று விளிப்பதைப் பாசுரங்களில் காணலாம். இதற்கு ஒரு கருத்து உண்டு. அது யாதெனில் : 'பரம பதத்தின் இருப்பைத் தவிர்ந்தும் 'பனிக் கடலில் பள்ளிக் கோளைப் பழக விட்டும் (பெரியாழ். திரு. 5. 3: 9) நீ இத்திருவாய்ப்பாடியில் நந்த கோபர்க்கு மகனாகப் பிறந்தது இங்ங்ணம் கிடந்து உறங்கவோ? எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ நீ அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்தில் பிறந்தது? (திருப். 28) ஆகவே, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ?’ என்பதாகும். * மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே (திருப். 21) - சரணாகதி பண்ணிக் கிடப்பது போலே யாம்வக் தோம்: "ஆற்றாது வந்து'-இராமன் பிராட்டி விஷயத்தில்