பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அர்த்த பஞ்சகம் அபசாரப்பட்ட காகாசுரன்மீது நான்முகன் கணையைத் தொடுத்து விட-அது எத்திசையும் உழன்றோடி எங்கும் புகலற்றுஇளைத்து விழுந்த காகம்போல் வந்து என்றபடி. ‘யாம் வந்தோம்’-சத்துருக்கள் உன்னுடைய அம்புக் குத் தோற்று அவ்வம்பு பிடரியைப் பிடித்துத் தள்ள அவர் கள் வருமாறு போல, நாங்கள் உன்னுடைய சவுந்தரிய செளசீல்யாதி குணங்கள் பிடித்திழுக்க வந்தோம்-உன் திருவடியை நோக்கி வந்தோம். இதில் சரணாகதி குறிப் பிட்டபடி, 'அங்கண்மா ஞாலத்து' (22) என்ற இருபத்திரண்டாம் பாசுரத்தில். பேரரசர்கள் நின் சீரிய சிங்காசனத்தின் கீழ்த் திரண்டு வந்து கிடப்பதைப் போலே, நாங்கள் வந்து தலைப் பெய்தோம்’-கிட்டினோம். திங்களும் ஆதித்யத்னும் எழுந்தாற்போல் 'நின் திருக்கண்கள் இரண்டினாலும் கடாட்சிக்க வேண்டும் அருங்யார் ஹைகளாக வந்து அடிபணியா நின்ற எங்களை'-என் கின்றார்கள். இதிலும் பிரபத்திக் குறிப்பைக் காணலாம். 'மாரி மழை முழைஞ்சில் (23) என்ற இருபத்து மூன்றாம் பாசுரத்தில் கண்ணபிரான் திருப்பள்ளியறை யிலிருந்து எழுந்து சீரிய சிங்கம் போல் புறப்பட்டு எழுந்தருளி நடையழகு காட்டி நடத்தருளிச் சிங்கா சனத்தின்மீது வீற்றிருந்து தங்கனின் (ஆய்ச்சியரின்) வேண்டுகோளை ஆராய்ந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றனர். அறிவுற்று என்பதால் அடியோடு அறிலில்லாததொரு பொருளுக்கு அறிவு குடிபுகுந்தமை தோன்றும். சிங்கம் பேடையைக் கட்டிக்கொண்டு கிடந்து உறங்கும்போது அறிவிழந்திருக்கும் கண்ணாபிரானும். நப்பின்னைக்