பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பயனை அடைவதறகுத தடையாய உளளவைகள பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகளை மெய்விளக்க அறிஞர்கள் விரோதிகள் என்று வழங்குவர். இவையும் (1) சொரூப விரோதி, (2) பரத்துவ விரோதி, 13) புருஷார்த்த விரோதி, (4) உபாய விரோதி, 15) பிராப்தி விரோதி என்று ஐவகைப்பட்டிருப்பதாகக் கூறுவர். இவற்றையும் விளக்குவோம். 1. சொரூப விரோதி : சொரூபம்: ஈசுவரனுக்குத் தொண்டு பூண்டிருத்தல். விரோதி; 'யான் எனக்கு உரியன்' என்று நினைக்கும் அகங்காரமும் இபபொருள் என்னு டையது' என எண்ணும் மமகாரமும் ஆகிய இரண்டும். இவை தவிர, தேகமே ஆன்மா என்ற மனமயக்கமும் எம் பெருமானை யொழிந்தவர்கள் பக்கம் சேஷம் (அடிமை) என்றிருத்தலும், தானே சுதந்திரன் என்ற எண்ணமும் இதனுள் அடங்கும். 2. பரத்துவ விரோதி : பிற தெய்வங்களைப் பரம் என்றும் அவை எப்பெருமானுக்குச் சமம் என்றும் திருமாலினது அவதாரங்கள் வெறும் மனிதத் தன்மை என்றும், அர்ச்சைகளுக்குப் பலன்களைப் பயக்கும் ஆற்றல் இல்லையென்றும் கருதுதலாகும். 3. புருஷார்த்த விரோதி : பகவத் கைங்கரியங்களை விட்டு வேறு புருஷார்த்தங்களில் விருப்பமும், தமக்கு விருப்பமான பகவத் கைங்கரியத்தில் இச்சையும் ஆகும்.