பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 & அர்த்த பஞ்சகம் 4. உபாய விரோதி : ஏனைய உபாயங்கள் சிறப்பு டையன என்ற சிறு முயற்சியால் சாதிக்கத் தக்கதாயிருத் லாலும், உபேயம் அரிய முயற்சியால் சாதிக்க யுத்தமா யிருத்தலாலும், இடையூறுகள் பலவாயிருத்தலாலும் உண்டாகும் சங்காத்திரயம் (மூன்று ஐயங்கள்) ஆகும். 5. பிராப்பிய விரோதி : இப்பிறப்பிற்கு ஏதுவாகிய பிராரப்த கர்மமாக (நுகர்வினையாக) வந்த உடலுடன் சம்பந்தமும், அநுதாப லேசமுமில்லாததாய், பெருத்த தாய், திடமாயுமுள்ள பகவத் அபசார பாகவத அபசார அலஹ்ய (பொறுக்க முடியாத) அபசாரங்களாம். திருவாய்மொழி திருவாய்மொழியில் வீ டு மி ன் முற்றவும் (1.2) சொன்னால் விரோதம் இது (3.9), ஒரு நாயகமாய்' (4,1) கொண்ட பெண்டிர் (9.1) என்ற நான்கு திருப்பதி கங்களும் பயனை அடைவதற்கு இடைச்சுவரான தடை களைப் பற்றிப் பேசுவன. - (1) உலகிற்கு உபதேசம் வீடு மின் முற்றவும் (1,2) என்ற திருவாய்மொழியால் இது நுவலப் பெறுகின்றது. எம்பெருமானுடைய நன்மையையும் சம்சாரிகள் பற்றிக் கொண்டுள்ள பொருள்களின் அல்பம், நிலையின்மை முதலியவற்றையும் அருளிச் செய்து மற்றைப் பொருள் களில் வைராக்கியத்தை முன்னிட்டு இறைவனிடத்தில் பக்தியைச் செய்யுமாறு உபதேசிக்கிறார். பொருள்களிடத்திலுள்ள ஆசை முழுவதினையும் விடுங்கள்; அவ்வாறு விட்டு, உம்முடைய உயிரை, மோட்சவுலகத்தையுடைய இறைவனின் திருவடிகளில் சமர்ப்பியுங்கள் (1)