பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 125 நிலைபெற்ற உயிர்கள் தங்கியிருக்கின்ற உடல்கள் தோன்றி மறையும் மின்னலைக் காட்டிலும் நிலையில்லா தனவாம் என்று சொல்லுமிடத்து, நீங்களே அதனைச் சிறிது நினைத்துப் பாருங்கள். (2) 'யான்' 'எனது என்னும் செருக்காகிய இவற்றைப் பக்க வேருடன் அடியோடு அழித்து, இறைவனைச் சேர் மின்; அவ்வாறு சேர்தற்கு ஒத்ததும் மிக்கதும் இல்லை (3) இறைவனுடைய வடிவம், அழிந்து போகின்ற உடலும் அழியாததான உயிருமாகிய இவற்றின் தன்மை யினையுடையதன்று எல்லையில்லாத ஆனந்தமயமானது; ஆகையால் வெளிப் பொருள்களிடத்துள்ள ஆசையினை நீக்கி அவனைப் பற்றுங்கள். (4) புறம்பேயுள்ள ஆசை நீங்குமாயின், உயிரானது மோட்சத்தையடைந்ததாம்; நிலைபெற்ற மோட்சத்தை அடைய விரும்பினால், அந்தக் கைவல்ய இன்பத்தினையும் அழித்து, அவ்விறைவனுக்கே தீர்ந்து அவனைப் பற்று g)}ff {i_1f7 #5. (5) இறைவனும் பற்றையுடையவனாகி உலகத்துப் பொருள்களெல்லமாகவும் நின்றான்; ஆதலால் நீயும் பற்றையுடையையாய் அவ்விறைவனுடைய தொண்டுகள் அனைத்திலும் சேர்க. (6) கட்டடங்க அழகினதான செல்வம் முழுவதையும் பார்த்து 'அஃது இறைவனுக்கு அடங்கிய செல்வமென்று நினைத்து அச்செல்வத்திற்குள் நீயும் அடங்குக. (7) மனம் வாக்குக்காயம் ஆகிய மூன்றையும் ஆராய்ந்து பார்த்து, மற்றைப் பொருள்களினின்றும் மீட்டு இறை வனிடத்திலே சேர்ப்பாய் (8)