பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அர்த்த பஞ்சகம் அவ்விறைவனிடத்தில் சென்று சேரவே, உங்களிடத் தில் வந்து சேர்ந்திருக்கின்றனவெல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்; அதற்கு மேல் உயிர் உடலை விட்டு நீங்கும் காலத்தை எண்ணி இருப்பாயாக. (9) எண்ணாலே மிக்கிருப்பனவாய் (மிகப்பவாய்) ஞானத் திற்கு நிலைக்களமாய் ஞானமயமாய் அழிவற்றனவாய் இருக்கின்ற உயிர்களையும், அழிவற்ற வளவிய புகழ் களையுடைய நாராயணனது உறுதியான திருவடிகளைச் சேர்வாய். (10) (2) மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல். இது சொன்னால் விரோதம் இது'(3.9) என்ற திருவாய் மொழியால் விளக்கம் அடைகின்றது ‘கவிபாடும் உங்கள் திறமையைக் கீழான விஷயங்களில் பயன்படுத்தி அதோ கதி அடைவது தகுதியன்று உய வற உயர்நலமுடைய வனான எம்பெருமான் விஷயதிதில் உங்கள் கவன சாதுரி யத்தைச் செலுத்துதே தக்கது' என்று உபதேசிக்கின்றார் நான் இந்த நன்மையைச் சொன்னால் உங்களுக்கு விரோதமாகவே இருக்கும்; ஆயினும் சொல்லுவன் கேளுங் கள்; வண்டுகள் தென்னாதென்னா என்று ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற என் யானை என் அப்பன் எம்பெருமான் உளனாயிருக்க, என் நாவி னின்றும் சுரக்கும் இனிய கவிகளை யான் ஒருவருக்கும் கொடேன். (1) குளங்கள் நிறைந்திருக்கின்ற கழனிகள் சூழ்ந்துள்ள இடமகன்ற நல்ல குறுங்குடியில் செளலப்பியம் முதலிய குணங்களைப் பிரகாசிப்பித்துக் கொண்டு நித்திய வாசம் பண்ணுகின்ற எந்தையை எந்தைக்குப் பெருமானை யொழிய, தன்னை உளனாகவே கொண்டு ஒரு பொருளாக