பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 127 எண்ணித் தன் செல்வத்தை மிக உயர்ந்ததாக மதித் திருக்கும் இம்மானிடத்தைக் கவிபாடுவதால் பயன் யாது? (2} புலவீர் காள்: சிறிதும் இடையீடு இல்லாத பலப்பல ஊழிக் காலமெல்லாம் நிலைநின்று அநுபவிக்கும்படி செல்லுகின்ற வழியைத் தருகின்ற, நம்முடைய வானவர் தலைவனையொழிய, புறம்பே சென்று, மிகமிக நல்லதான உயர்ந்த கவிகளைக் கொண்டு, உங்களைத் தாழ்வாக நினைத்துச் சிறிய பனிதர்களைப் பாடுவதால் யாது - (3) புலவீர்காள்! ஆவது என்? அழிந்து போகின்ற மனிதர்களைப் பாடிப் படைக்கும் பெரிய பொருள் எத்தனை நாட்களுக்குப் போதும்? ஒளி பொருந்திய மணி முடியைத் தரித்த விண்ணவர் தந்தையைப் பாடினால் தனக்கே உரியவனாக நினைத்துப் பிறவி அறும்படியும் செய்வான். . (4) நீங்கள் அடையக் கூடிய பயன் ஒன்றும் இல்லை; குப்பையைக் கிளறினாற் போன்ற இழிக்கத் தக்கதான செல்வத்ப்ை மிக அதிகமாகப் புகழ்ந்து உங்களுடைய வாக்கின் வன்மையை இழக்கின்ற புலவீர்காள்: கவிபாடு வதற்குப் பொருளாகக் கொள்ளுவதற்கு வேண்டிய குணங்கள் எல்லாம் குறைவில்லாதவன்; நீங்கள் விரும்பின அனைத்தையும் தருவான்; குற்றமில்லாத வள்ளல் மணி போன்ற நிறத்தினை உடையவனான இறைவனைக் கவி சொல்ல வாருங்கள். - - (5) புலவீர்! வாருங்கள்; உங்கள் உடலை வருத்திக் கைத் தொழில் செய்து உயிர் வாழுங்கள்; நிலை பெற்ற இந்த உலகத்தில் செல்வமுடையார் இலர்; இப்போது நோக்கி