பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 129 கண்டு பிறப்பினை இவர்கள் நீக்க வேண்டும் என்று நினைத்துப் படைக்குந்தோறும் பொருந்தி உலகைப் படைத்தவனுடைய கவிஞனான எனக்குக் காலம் உள்ள வரையிலும் மற்றொருவரைக் கவிபாடுதல் தகுமோ? (10) (3) செல்வம் கிலையாமையும் திருமாலடிமையின் நிலை பேறும் : இது ஒரு நாயகமாய் (4.1) என்னும் திருவாய் மொழியால் விளக்கப் பெறுகின்றது. முன் திருவாய் மொழியில், பிறரைத் துதி செய்யாமல் சர்வேசுவரனைத் துதி செய்யப் பாருங்கள் என்றார். இத்திருவாய்மொழி யில் அங்ங்னம் துதி செய்வது சில பயனுக்காகத்தானே' என்று அவற்றினுடைய சிறுமை, நிலையின்மை முதலிய குற்றங்களின் மிகுதியை அருளிச் செய்கின்றார். இங்கு ஐசுவரியம் கைவல்யம் இவற்றின் குற்றங்களைச் சொல்லி அவற்றைத் தவிர்க்குமாறு உபதேசிக்கின்றார். செல்வம் அற்பமானது, நிலையாதது முதலிய குற்றங் களையுடையதால் தண்ணிது (இழிந்தது) ஆன்ப லாப மாகிய கைவல்யம் நிலைத்து நிற்பதாயினும் புருஷார்த்தம் அல்லது ஆகையாலே தண்ணிது, ஆகவே இவற்றை விட்டு எல்லா நற்குணங்களையுடையவனாய், விருப்பியவை அனைத்தையும் கொடுக்கக் கூடியவனாகிய பகவானைத் துதி செய்யுமாறு பரோபதேசம் செய்கின்றார். ஒற்றை வெண்கொற்றக் குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும் படி உலகத்தை யெல்லாம் ஒரு சேர ஆண்ட பேரரசர்கள், கரிய நாயால் கவ்வப் பெற்ற காலையுடையவர்களாய்ப் பெரிய நாட்டி லேயுள்ள மக்கள் எல்லாரும் காணும்படியாக இப்பிறவியி லேயே இரந்து உண்ணும் நிலையை அடைவார்கள்: ஆதலால் திருமகள் கேள்வனான நாராயணனுடைய திரு அ.-9