பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 அர்த்த பஞ்சகம் வடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில்) மனத் தால் நினைத்து உய்யப் பாருங்கள். (1) திறைப் பொருளைக் கொணர்ந்து கொடுத்து உயிர் வாழ்ந்து போமின் என்று கூறி, உலகத்தையெல்லாம் ஒரு குடையின் கீழே ஆண்ட பேரரசர்கள் இன்பத்தை அளிக் கின்ற தம் பெண்களை இப்பிறவியிலேயே பிறர் கொள்ளும்படியாகத் தாமே விட்டு, கொடிய மின்ஒளி பரக்கின்ற அடவிக்குச் சென்று,அங்கும் பகைவர்களாலே துன்புறுத்தப் படுவார்கள்; ஆகையால், ஒளி பொருந்திய திருமுடியைத் தரித்த திருமகள் கேள்வனுடைய திருவடி களை விரைந்து சேர்மின். (2) தம்முடைய அடிகளிலே பொருந்திய முடியினையுடைய வர்களாகிய அரசர்கள் தொழா நிற்க, இடியைப் போன்ற முரசங்கள் ஒலித்துக் கொண்டிருக்க வீற்றிருந்த பேரரசர் கள் (அந்நிலை கெட்டு) பொடியோடு சேரந்த தூளியாய்ப் போவார்கள்; ஆகையால், வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத் தரித்த முடியினையுடைய கண்ண பிரானது திருவடிகளை விரைவில் நினையுங்கள். (3) 1. முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள் ளோரும் முடிவில் ஒரு பிடிசாம்ப ராய் வெந்து மண்ணா வதும் கண்டு பின்னும் இந்த படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால் பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாம் உய்ய வேண்டும் என் றே அறிவர் இலையே என் பட்டினத்தார் பாடல் ஈண்டு அநுசந்திக்கத் தக்கது.