பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அர்தத பஞ்சகம் பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின. உணவை உ ண் டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய சொற்களைப் பேசுகின்ற பெண் கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள்; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு, 'எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்' எ ன் று தட்டித் திரிவார்கள்; ஆதலின் திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியை யுடைய ஆதிஅம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அநுபவிக்கப் பாருங்கள். (7) நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற் கொண்டு உலகத்தாரோடு பொருந்தியிருந்து உலகத்தை யெல்லாம் தனக்கே உரியதாக ஆக்கி அரசாண் டாலும், அந்த அரசச் செல்வம் இறைவன் திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள் செவ்வையை உடைத்தான இன்பத்திலே நிலை பெற்றிருப்பார்களேயாயினும் அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால் படத்தைக் கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது திருநாமத்தை நாவினால் நவிற் றுங்கள்; அங்ங்னம் நவிற்றினால், பின்னர் மீண்டு வருதல் இல்லாத அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம். (8) பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி ஐந்து இந்திரியங் களையும் வென்று துாறு மண்டும் படி இவ்வுடலை ஒறுத்துத் தவம் செய்தவர்களும் அவ்விஷயத்தில் அவனது திருவருள் இ ல் லா த வர் க ள். குடிகள் பொருந்தியிருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்க மோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே கருடப்பறவையையுடைய திருவடிகளைச் சேருங்கள்;