பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


xi

நாட்டமுடன் நாமுகந்து
நலம்பெற்று வாழ்த்திடுவோம்
தேட்டமுறு வைணவத்தின்
பிரபந்தம் போக்கியமே.

14. வைணவத்தின் போக்கியமே
வரலாற்றின் வாய்ப்பாகும்
வைணவம்தான் நிறைவாக
விரவியதாம் பரவியதாம்
வைணவம் விஷ்ணுமயம்
என்றுரைத்தால் வயமதுவே
வைணவமே வையம்நிறை
பொருளாக வளர்ந்திடுமே.

15. வளர்ந்தேற்றம் பெற்றிடவே
வண்டமிழால் வேங்கடத்தெம்
உளந்தோய்ந்து உவந்திடவே
துனலொன்றை வெளியிட்டுக்
களங்காணும் அண்ணல்நம்
கலைமுதல்வர் வேங்கடத்தான்
தளர்ந்தோர்க்கு மனம்தேற்றும்
பஞ்சகத்தைத் தந்திட்டார்.

16. பஞ்சகத்துள் மனமிருத்தி
பரிந்துரைத்த வரிகளெலாம்
நெஞ்சகத்துட் கொள்வதற்கே
நேர்பட்டார் தம்நூலில்
எஞ்சகத்தார் ஏன்றுகொள
அருத்த பஞ்சத்தை
செஞ்சுவையில் செப்பியவை
சேமத்தின் நிலைக்களமே.