பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 133 சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம். (9) (மனம்) தன்னைச் சார(தம்) வசப்பட்ட அம்மனத் தினை ஞான சொரூபமாக உள்ள ஆன்மாவோடு சேர்ந்து நன்றாகப் பார்த்து எல்லாப் பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆன்ம அநுபவத்தையே மோட்சமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப் பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்கு மேல், அந்த மோட்சமும் இல்லை; ஆனபின்பு, ஒருவித குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலா தொழிவானேயானால் அதுவே பரமபுருஷார்த்தமான மோட்சமாகும்; ஆதலால் மேற் பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள்குறுகுமினோ' என்ற அதுவே மோட்சமாகும். (10) (4) கர்ம வசத்தால் கிட்டிய பந்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல். இது கொண்ட பெண்டிர் (9.1) என்ற திருவாய்மொழியில் விளக்கம் பெறுகின்றது. சர்வேசுவரனே இயல்பாக உள்ளபந்து; அவனைத் தவிர எல்லோரும் ஒருக் காரணம் பற்றி வந்த பந்துக்கள். ஆகவே மற்றையோரைவிடுத்து அவனையே பற்றி உய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் இப்பதிகத்தில்." 3. மற்றையோர் இரட்சகர் அல்லர்; நாராயணனே இரட்சகன் என்றார் இதுகாறும். இனி, மற்ற உபாயங்களும் உபாயம் அன்று; அவனே உபாயம் என்கின்றார். சித்தோபாயத்தை வற்புறுத்திய Լ1ւգ..