பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 அர்த்த பஞ்சகம் மணம் செய்து கொள்ளப்பெற்ற பெண்களும் மக்க ஆளும் உறவினர்களும் தாயாதிகளும் நட்பினர்களும் ஆகிய அனைவரும், கையில் உள்ள பொருள் உண்டாகக் கண்டபோது அன்புள்ளவர்களாகக் காணப்படுவார்கள்; அஃது இல்லாத போது அன்புள்ளவர்களாக இருப்பது இல்லை; ஆதலால் பத்துத் திசைகளிலுமுள்ள எல்லாப் பொருள்களையும் பிரளய காலத்தில் உண்டு காப்பாற்றிய உபகாரகனாகிய எம்பெருமானுக்கு அ டி யா ரா கி உய்யயுங்கள்; இன்றேல், பொருந்திய துணை வேறும் ஒன்றும் இல்லை. . (1) தாயாதிகளும் மற்றையோரும் துணையாயும் சார் வாயும் இருப்பவர்கள் போலக் காட்டி, சேர்ந்திருக்கின்ற செல்வம் இருக்குமேயானால் அட்டைகளைப் போன்று சரம் அறச் சுவைத்துவிடுவார்கள்; ஒர் அம்பினால் மராமங்கள் ஏழனையும் துளைவி செய்த காளமேகம் போன்ற எம்பெருமானைத் தஞ்சமாகப் பற்றி உய்விக்கப் போமின்; அவ்வாறு இன்றி வேறு சிலரைப் பற்றினால் ஒரு பயனும் இல்லை. (2) கையிலே பொருள் இருப்பதைக் கண்டால் வணக்கம் என்று கூறி, யாதாயினும் ஒன்றினைப் பெற்றுக் கொண்டு அகன்று போவர்; அறிவின்மையையும் துன்பத்தையும் 'உண்டாக்குகின்ற வறுமையைக் கண்டால் அந்தோ!' என்று இரங்குவாரும் இல்லை; ஆதலால் கண்டவர் அனைவரும் கலங்கும்படியான தொழில்களைச் செய்கின்ற அசுரர்கள் அழியும்படியாக வடமதுரையிலே அவதரித்த கண்ணபிரானுக்கு’, அருளைப்பெறுவதற்குரிய அடியவர் 4. வடமதுரைப் பிறந்த' (பாசுரம் 3,4,5,6,7,8, 9,10) என்று வ ரு வ தா ல் இப்பதிகத்தை வடமதுரையை மங்களாசாசனம் செய்ததாகக் கொள்ளலாம்.