பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 135 களாகி உய்வதே நலம்; அங்ங்ணம் இன்றேல், பாதுகாவல் வேறு இல்லை. (3) செல்வம் நீங்கி வறியர் ஆகுங்காலத்தில் நமக்குப் புகல் ஆவர் என்று நினைத்து, (செல்வம் உள்ள காலத் திலே) செல்வம் முதவியவற்றால் வசப்படுத்திக் கொள்ளப் பட்டவர்சள், கடனைத்திரும்பப் பெற்றவர்கள் போன்று ஒர் உதவியும் செய்யமாட்டாதே அல்பர் ஆவார்கள்: நம்மால் செல்வம் முதலியன கொடுக்கப்படாவிட்டாலும் உதவி செய்யமாட்டாத அந்த அல்பரே ஆவர்; ஆதலால் நன்றி கெட்டவர்களைப்பற்றிப் பேசுவதால் பயன்யாது? வடமதுரையின் கண்ணே வந்து அவதரித்த கண்ண பிரானுடைய சீரிய கல்யாண குணங்களே நமக்குத் தஞ்சம் என்று நினைத்தும் கூறியும் உய்ந்து போமின்; அங்ங்னம் போவது ஒழிய வேறு பயன் இல்லை. (4) சதிரை உடையோம் என்று தங்களைத் தாங்களே இசைந்து இனிய வார்த்தைகளைப் பேசுகின்ற மகளிரிட த் தில் இனிய இன்பங்களை அநுபவித்தவர்களே, அவ் இனிய போகம் அவர்களை விட்டுக் கழிய (நீங்க என்றபடி) வேறு ஒரு துன்பத்தை அடைவார்கள்; ஆதலால், கண்டார் அஞ்சத்தக்க காரியங்களையே செய்கின்ற அசுரர் அழியும் படி வடமதுரையிலே அவதரித்தவனான கண்ணபிரா னுக்கு எதிர் கொள்ளுகின்ற அடியவர்களாகிப் பிழைத் துப் போவதே இன்பமாவது; அதனை ஒழிய வேறு இன்பம் இல்லை. (5) இவ் உலகத்தில் இன்பம் என்பது சிறிதும் இல்லை; அந்தோ! நிலை நின்ற பேற்றினை நினையாமல் பழங் காலத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர் பிறந்து இறந்து ஒரு பயனும் இன்றிக் கழித்தார்கள்? ஆதலால், பழைய நகரமாகிய வளப்பம் பொருந்திய வடமதுரையிலே வந்து