பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அர்த்த பஞ்சகம் அவதரித்த கண்ணதரானுடைய சீரிய கல்யாண குணங் களையே சொல்லி உய்ந்து போதலை ஒழிய, சுருங்கச் சொல்லலாவது வேறு ஒன்று இல்லை. (6) இதனைப் போன்றது ஒரு பெரிய உபாயம் வேறு ஒன்று இல்லை; சுருங்கச் சொல்லுகின்றோம்; வேறு வழி களைத் தேடித் திரிந்து அலைய வேண்டா, பெரிய இவ் வுலகத்திலே உள்ள எல்லா உயிர்கட்கும் இறைவனைப் பற்றிச் சிந்தித்தலாகிய இஃது ஒன்றே போதியதாம்; ஆதலால். வடமதுரைப் பிறந்தானாகிய எங்கள் கோபால கிருஷ்ணனுடைய குற்றம் இல்லாத கல்யாண குணங்களை நாள் தோறும் சொல்லிக் கொண்டு வாழ்தலே குணமாகும்; இவ்வாறு சொல்லிக் கொண்டு வாழ்தல் குற்றம் ஆகாது. (7) மேல் பாசுரத்தில் கூறியபடி வாழ்தலாகின்ற இஃது அன்றோ குணமாவது, ஐயோ! மாயவனாகிய இறைவ னுடைய திருவடிகளைத் துதித்துக் காலத்தைக் கழிக்க நினைக்க கூடியவர்களான பெரியோர்களுடைய வாழ்ச் சிக்குத் துணை ஆவதற்காக வடமதுரையிலே வந்து திரு வவதரித்தவனுடைய வளவிய புகழையே ஆசைப்படும் துணையாகக் கொண்டு வாழ்வதே மேலான வாழ்வாம்; இவ்வாழ்வினைக் காட்டிலும் மேம்பட்ட வாழ்வு யாது ஒன்றும் இல்லை. (8. பகவானுக்கு வேறு பட் ட த ா ய் இருப்பது ஒரு விஷயத்தைய பற்றிக் கொண்டு, அதனைக் கா. டிலும் மேம்பட்டதாய் இருப்பது ஒரு விஷயம் வேறு இல்லை என்று அதனையே காக்கும் கடவுளாக நினைத்து, காது களின் தொளையைப் பெருக்கப் புக்கு மூளி ஆக்கிக் கொள்வதைப் போன்று, தண்ணிய முறையையுடைய வாழ்க்கையையும் இழந்து விடுவர்; பெரிய துகிற்கொடிகள் கட்டப்பெற்றிருக்கும் மாடங்களையுடைய வடமதுரை