பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


xii

17. நிலைத்திடுவோம் நீணிலத்துள்
நிலவுகின்ற உயிர்களெலாம்
குலையாமல் இன்புற்று
வாழ்வதற்கே கூறியுளார்
மலைமீது விளக்காகி
மனிதரெலாம் மனங்கொளவே
கலையுரைத்து வைத்தவர்நம்
கவிமணியாம் டாக்டரிவர்.

18. கவிமணிகம் டாக்டர் தாம்
மனந்திறந்து உணர்த்தியவை
செவிமணக்க மெய்ஞ்ஞானம்
சிந்திக்க விஞ்ஞானம்
செவியாரச் செப்புமித்
திருமகனை நாமெல்லாம்
குவிந்திங்கே கூடிடுவோம்
வாழிந்திடுவோம் வாழியநீர்.

20. வாழ்த்திடவே வாரீர்!
எனவணங்கிக் கூறுகின்றேன்
ஆழ்ந்தமன அன்போடும்
அருளோடும் அறிவுரைத்து
ஆழ்வார்கள் வாழ்வார்கள்
அதுவேநம் விழைவென்போம்
வாழ்த்துதுமே பல்லாண்டு
எனக்கூறி வாழத்துமே.

'தமிழ் இல்லம்' 2, நவாப் தோப்புத் தெரு விழுப்புரம் 18—6-1994 --வீர. அரங்கன்