பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xvii

பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் வேறு பொருள்கள் எவையும் சமைக்காமல், அல்லது வாங்காமல் தம் உள்ளக் கருத்தான நூல்களையே (தம் உள்ளத்தையே) சீமந் நாராயணனுக்கு (அமாவாசைக்காகக் காத்திராமல்) சமர்ப்பித்து வருகின்றார்கள். ஆசிரியம், இலக்கியம், திறனாய்வு, சமயம்-தத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, வாழ்க்கை வரலாறு- தன் வரலாறு என்றிப்படி அந்த விதத்தில் கிட்டத்தட்ட 108 ஐ நெருங்கியும் விட்டார்கள். இந்தப் பூசை முடிந்ததும் வேறு பூசைகள் என்றிவ்வாறு பேராசிரியர் டாக்டர் ரெட்டியாரவர்களின் நூற்றொண்டான அரச பிரதட்சணம் பன்னெடுங்காலம் தழைத் தோங்கவும், அதனால் வாசகர் உலகம் பயன் பெற்று உய்யவும் அருள் புரியுமாறு அருள்மிகு பதுமாவதித் தாயாரையும் அருள்மிகு திருவேங்கடவாணனையும் இறைஞ்சி நிற்கின்றோம்.

"நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்"

-- இராம. மகாதேவன்

திருப்பதி

7-6-1994