பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


XX எண்ணிக்கையுள்ளனவ. அங்ங்னமே, வரகூர் திருவை யாற்றில் படித்த அதிக எண்ணிக்கையுள்ள புலவர்கள் கொண்டது. அந்த ஊரைச் சார்ந்தவர் திரு விர. அரங்க னார். இவ்வளவு எண்ணிக்கையில் உள்ள புலவர்கட் கெல்லாம் வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்தியவர் திரு. டி. ரா. புருடோத்தம நாயுடு அவர்கள். இவர்கட் கெல்லாய் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தவர் மயிலை முனிவர் பன்மொழிப் புலவர் திரு. வே. வேங்கடராஜூலு ரெட்டியார் அவர்கள். இவர்களில் பெரும்பாலோர் ஊர்ப் பக்கங்களிலேயே தமிழாசிரியர்களாகப் பணியாற்றி தம் ஊர் களிலேயே அடங்கிப் போனவர்கள். நால்வர் பல இடங் களில் பணியாற்றி ஒய்வுபெற்று நற்புகழுடன் வேற்றுாரில் குடியேறி நிலையாக வாழ்பவர்கள். திரு. வீரஅரங்கனார் விழுப்புரத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி அப்பக்கத் திலுள்ள ஒரு பெண்ணை மணந்து கொண்டு இல்லம் அ ைம த் துக் .ெ க | ண் டு விழுப்புரத்தில் தங்கியுள்ளவர். படித்த காலத்தில் துடிப்புள்ள புலமை மிக்க இளைஞர்; பணியாற்றிய காலத்தில் "நல்லாசான்’ என்ற புகழுடன் திகழ்ந்தவர்; நற்பழக்கங் கள் உள்ளவர்; சமூக உறவுகள் அதிகம் கொண்டவர். கடுமையாக உழைப்பவர். புலவர்களில் உயர்நிலைப்பள்ளி முதல் தலைமையாசிரியராக உயர்ந்து புகழ் பெற்றவர். இவர், என் முதல் மகன்பொருட்டு என்னுடன் பெண் தேடி தென் ஆர்க்காட்டு மாவட்டத்தில் அலையும் போது எனக்கு உறுதுணையாக இருந்தவர். பழகுவதற்கு, இனியர்; பண்பாடு மிக்கவர். பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல் என்ற பொன்மொழிக்கு இலக்கிய மாகத் திகழ்பவர். இத்தகை பண்பாளர் இந்த நூலுக்கு சிறப்புப் பாயிரப் பாமாலை நல்கியது இந்நூலின் பேறு; அடியேனின் பேறுமாகும். இதனை நல்கிய என் உடன் பிறவாச் சோதரர் திரு வீர. அரங்கனாருக்கு என் உளங்: கணிந்த நன்றி உரித்தாகும். -