பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxii


வேந்தராக இருந்தபோது (மார்ச்சு-1994) அடியேன் அங்கு தேர்வாளராகச் சென்றபோது ஒருநாள் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் இதயங்கள் பேசின. ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க்குமல்லவா? எங்கள் உறவு அப்படியாகிவிட்டது. இந்தநூலுக்கு அரியதோர் அணிந்துரை பெறவும் வாய்ப்பளித்தான் ஏழுமலையப்பன். அணிந்துரை பெற்றது இந்தநூலின் நற்பேறு; அடியேனின் பேறுமாகும். அணிந்துரை வழங்கிய அன்பர் மகாதேவனுக்கு அடியேனின் நன்றி என்றும் உரியது.

நிருவாளர் A. இராமச்சந்திர ரெட்டியார் வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி வட்டம் தேசூரைச் சேர்ந்தவர் வழி வழி வைணவ மரபினர்; நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த நிலக்கிழார்; ஏழை எளியோர்க்கு இரங்கும் இயல்பினர். திருமால்பால் பக்தி நிறைந்த பண்பினர். ரேட்டி குலத்தினரிடம் இயல்பாகக் காணப்பெறும் விருந்தோம்பும் பண்பு இவரிடம் நிறைய உண்டு. எவருடனும் இன் முகத்துடன் பழகி இன்சொல் உதிர்க்கும் பெருமகனார்.

கடந்த பத்தாண்டுகளாக இவரும் இவரோடு ஒத்துழைக்கும் சில வைணவப் பெருமக்கள் சிலரும் வந்தவாசி நகரில் ஸ்ரீமந் நாதமுனிசுவாமிகள் வைணவ சபையைத் தோற்றுவிந்து அதன் தலைவராக நின்று அரும்பணிகள் ஆற்றி வைணவத்தைக் குன்றாது பாதுகாப்பவர். ஆண்டு தோறும் சூலைத் திங்களில் (ஆடித்திங்கள் முதல் அல்லது இரண்டாவது சனி, ஞாயிறு) ஆண்டு-விழா வைணவமாநாடு நடத்தி அறிஞர்களைக்கொண்டு சொற்பொழிவுகள் நிகழச் செய்துத் தீபாராதனை நடத்தியும் பெருந்தொண்டு ஆற்றிவருபவர். கடந்த எட்டு ஆண்டுகளாக ஞாயிறு தோறும் பிற்பகல் 2 மணி அளவில் பகவத் விஷயகாலட் சேபம் நடைபெறச் செய்துவருபவர்.