பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


1. அர்த்த பஞ்சகம்
_______________________________________________________

ஓர் ஆற்றங்கரை. அந்தக் கரையில் படகோட்டி ஒருவன் வழிப்போக்கர்களை இக்கரையிலிருந்து அக்கரைக்கும், அக்கரையிலிருந்து இக்கரைக்கும் கடத்தி அந்த வரு வாயைக் கொண்டு தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு சமயம் 'கற்றறி வித்தகன்’ என்று தன்னைக் கருதிக் கொண்டு அகந்தையுடன் இருக்கும் ஒருவனுக்கு இக்கரையி லிருந்து அக்கரைக்குப் போகும் வாய்ப்பு நேர்ந்தது. அறிஞன் படகில் ஏறிக்கொண்டான். இருவருக்கும் இடையே அடியில் கண்டவாறு உரையாடல் நிகழ்ந்தது.

அறிஞன் : படகுக்காரனை நோக்கி "நீ பகலத் கீதை படித்திருக்கிறாயா?" என்கின்றான்.

படகோட்டி : "சுவாமி! அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அந்தப் பக்கத்தில் தலைவைத்துக் கூடப்படுப்பதில்லை.” என்கிறான்.

அறிஞன் : அப்படியானால் உன் வாழ்க்கையில் பாதி வீணாகிவிட்டது' என்கிறான்.

அறிஞன் : "உனக்கு வேதம், உபநிடதங்கள் தெரியுமா?" என்கின்றான்.

படகுக்காரன்: "சுவாமி! இவையெல்லாம் என் வாழ்க்கைக்குப் பயன்படாதவை. ஆகவே, இவை பற்றித் தெரிந்துக்கொள்ள எனக்குச் சிறிதும் ஆசை இல்லை" என்கிறான்.

அ.-1