பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 அர்த்த பஞ்சகம் அறிஞன் : அப்படியானால் உன்வாழ்க்கையில் இன் னும் கால்பங்கு வீணாகிவிட்டது” என்கின்றான். படகுக்காரன் ஆற்றைக் கடப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தானாதலால் தன் பணியிலேயே மூழ்கிக் கிடந்தான். தனக்குத் தெரியாத விஷயங்களில் எல்லாம் அறிஞன் இப்படிப் பேச்சுக்கொடுத்ததை அவன் சிறிதும் விரும்பவில்லை. ஆனால் அறிஞன் கேட்டவற்றை பாதிக் கேட்டு, பாதிக்கேட்கமால் ஏதோபதில் சொல்லி வந்தான். ஒரு நிலையில் அறிஞனின் பேச்சு படகுக்காரனுக்கு எரிச் சலை ஊட்டியது. அவன் அறிஞனைக் நோக்கி "ஐயா! உமக்கு நீந்தத் தெரியுமா?’ என்ற வினாவை எழுப்பி னான். அறிஞன் “தனக்குத் தெரியாது?’ என்றான். "அப்படியானால் உங்களது வாழ்க்கை முழுவதும் வீணாகிவிட்டது. ஏனெனில், படகுஒட்டை ஆகிவிட்டது. அதன் வழியே நீர் வேகமாக புகத் தொடங்கிவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் படகு மூழ்கிவிடும். இத்தனைக் கலைகளைக் கற்றதாக நினைத்துக் கொண்டு இருக்கும் தாங்கள் அன்றாட வாழ்க்கைக்குப்பயன்படும் நீச்சல் கலை யைக் கல்லாததால் உங்கள் வாழ்க்கை முழுதும் வீணாகி விட்டதே' என்று கூறிவிட்டுப் படகுக்காரன் ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்கிவிட்டான். கலைஞன் நிலை என்ன ஆகியிருக்கும் என்பதை நாம் எடுத்துக் கூறவா வேண்டும்! அவன் நீரோடு போய் இருப்பான். அந்தக் கற்றறிவித்தகனைப்போல வேதங்கள், உபநிடதங்கள் முதலிய அனைத்துக் கலைகளைக் கற்றா லும் ஒருவன் ஈடேற இயலாது. அந்தக் கலைகளுக்கு எல் லாம் உயிர் போன்றது 'அர்த்த பஞ்சக ஞானம்'. இந்த ஞானம் பெற்றவனே பிறவிப் பெருங்கடலை நீந்துவான். நீந்தத் தெரியாமல் பல கலைகள் கற்றறிந்தும் அந்த கற்றறிவித்தவனுக்குக் கலைகளால் ஏதும் பயன் இல்லாமல் போனதன்றோ?, அதைப்போலவே இன்றியமையாது